கனடா நாட்டு அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம்!

[ யாழ் செய்திகள் ] - [ Dec 04, 2012 17:00:41 GMT ]

கனடா நாட்டு அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வருகைதந்த இக்குழுவினர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து குடாநாட்டு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

குடாநாட்டின் போருக்குப் பின்னரான தற்போதைய நிலைமையை அரசாங்க அதிபர் பிரிவு ரீதியாக 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக புள்ளிவிபரங்களுடன் விளக்கமளித்தார்.


மீள்குடியேற்றம் விவசாயம், மீன்பிடி மற்றும் வீதி அபிவிருத்திகள் போன்ற பல்வேறுதுறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இன்றைய சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய நாட்டுத் தூதுவரின் முதலாவது செயலாளர் எஸ்தர் வனஸ் மற்றும் அதிகாரி மேகன் பாஸ்ரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.