பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி
[ உதயன் ][ Mar 11 03:03 GMT ]
பான் கீ மூனுக்கும் அடுத்த பதவிக் காலத்தையும் கைப்பற்றும் ஆசை வந்துவிட்டது. அதனால்தான் இலங்கை விடயத்தில் அவர் இத்தனை சீற்றம் காட்டுகின்றார் எனத் தோன்றுகின்றது. இந்தப் பதவியில் அடுத்த தடவையும் அவர் தொடர்வ தானால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றி யம் போன்ற மேற்குலகின் ஆதரவுப் பின்புலம் அவருக்கு அவசியம். அது இல்லாமல், பதவியில் தொடரும் அவரது கனவு பலிக்காது. [  ]
இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும்
[ BBC தமிழோசை ][ Mar 10 21:22 GMT ]
இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது. [  ]
ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம்;நிபுணர் குழு அமைப்பதில் தாமதம்
[ டெய்லி மிரர் ][ Mar 10 10:35 GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர், நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லியான் பெஸ்கோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர். [  ]
படை முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள்; அடிப்படை உரிமை மீறல் என்று வழக்கு
[ உதயன் ][ Mar 10 10:32 GMT ]
அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுத்துவைப்பதற்கு இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம் களை அமைத்துள்ளதன் மூலம் அடிப் படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி நேற்றுமுன்தினம் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. [  ]
தமிழ்க் கூட்டமைப்பின் நிலைமை....
[ உதயன் ][ Mar 09 10:37 GMT ]
மேற்படி சந்திப்பு தமிழ்க் கூட்டமைப்புக்குத் திருப்தி தராமல் முடிவுற்றமைக்கு யார் காரணம் அல்லது என்ன காரணம் என்பது இருந்து விட்டுப் போகட்டும். அது பிரச்சி னையல்ல. ஆனால், ஏற்கனவே இந்தியத் தரப்பின் எடுப்பார் கைப்பிள்ளையாக கைக்கூலியாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு கூட்டமைப்புக்கு எதிராக அண்மைக் காலத்தில் பரபரப்பாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்தச் சமயத்தில் இந்தியத் தரப்புடன் கூட்டமைப்பு நல்லுறவையும் இறுக்கமான பிடிப்பையும் தொடர்ந்து பேண வேண்டிய தேவை உண்டு. [  ]
இராணுவ நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் குழுவை ஜனாதிபதி அல்லது இராணுவ தளபதி நியமிப்பார்
[ வீரகேசரி ][ Mar 09 10:33 GMT ]
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவ தளபதி நியமிப்பார் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [  ]
வட.- கிழ. புது முகங்களுடன் சேவையாற்றக் காத்திருக்கின்றேன் : நிருபமாவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
[ வீரகேசரி ][ Mar 08 10:12 GMT ]
"நாட்டில் சமாதானம் நிலை நாட்டப்பட்டதன் பின்னர் மக்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் முதல் தடவையாக தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அந்த தேர்தலில் பங்கு பற்றுவதற்கென அவர்கள் மிகுந்த உற்சாகத்தைக் காண்பித்து வருகிறார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவிருக்கும் பல புதிய முகங்களுடனும் தலைவர்களுடனும் சேவையாற்ற நான் காத்திருக்கின்றேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [  ]
இலங்கை விவகாரத்தில் பான்கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம்
[ வீரகேசரி ][ Mar 07 04:00 GMT ]
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம் என ஐக்கிய நாடுகளுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜெரார்ட் ஆரூட் தெரிவித்துள்ளார். [  ]
குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்....
[ உதயன் ][ Mar 06 13:46 GMT ]
காமாலைக் கண்ணணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல இலங்கை அரசும், அதன் அமைச்சரும் பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்துகளைப் பார்த்தால், நோக் கினால் யார் என்ன செய்யமுடியும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதன் அர்த்தமும் இங்கே மிகப் பொருந் துகிறது. தமிழ் மக்களுக்குரிய பிறப்புரிமைகளை, அவர் களின் பிரிக்கமுடியாத அரசியல் உரிமைகளை வழங்கி னால் இந்தக் குறுகுறுப்புகள் நீங்கியும், நீர்த்தும் போய் விடும் அல்லவா? [  ]
தாயகக் கொள்கையை பிரி.வாழ் தமிழர்கள் ஆதரிக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சட்டவிரோதம்
[ உதயன் ][ Mar 06 05:47 GMT ]
தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை களுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதை யும் அவர் வலியுறுத்தியுள்ளார். [  ]
|
ஒன்றாயச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம், ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி!
[ உலகத் தமிழர் பேரவை ][ Mar 11 02:47 GMT ]
போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில ; கொனறு; குவிதத் தோடு குழநi; தகளஇ; முதியோரஇ; ஊனமுறN; றார ; உடப் ட300இ000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. [  ]
தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிலவும் முரண்பாடுகள்
[ BBC தமிழோசை ][ Mar 10 21:21 GMT ]
இலங்கையில் பிப்ரவரி 25 வாக்கிலான நிலவரப்படி, அங்கே வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள போரினால் இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் இன்னும் சுமார் 99,000 இடம் பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்று ஐ.நா மன்ற மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை ஒன்று கூறுகிறது. [  ]
"மஹிந்த சிந்தனை'ப் பொருளாதாரத்தில் கடனை அடைப்பதற்குப் புதிய கடன்!
[ உதயன் ][ Mar 10 10:34 GMT ]
இலங்கையின் "மஹிந்த சிந்தனை' பொருளா தாரத்தை ஒரு பிடி பிடித்து, கிழித்திருக்கின்றார் பிரபல பொருளியல் ஆய்வாளரான ஹர்ஷா டி சில்வா. "மஹிந்த சிந்தனை' அரசின் தவறான நிர்வாகம், வீண் விரயம் போன்றவை காரணமாக கடந்த வருடத் தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்ப தாக அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார். [  ]
ஜீ.எஸ்.பி.பிளஸ் குறித்து பேச்சு நடத்த இலங்கை குழு பிரஸெல்ஸ் செல்லும்:ஜீ.எல்.பீரிஸ்
[ வீரகேசரி ][ Mar 10 10:31 GMT ]
ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் வாரத்தில் இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். [  ]
எந்த விசாரணைக்கும் ஐ.நாவுக்கோ சர்வதேசத்துக்கோ இடமளியோம்: சம்பிக
[ வீரகேசரி ][ Mar 09 10:36 GMT ]
இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளமைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். [  ]
வெளிநாட்டில் செயற்படும் புலிகளின் அமைப்புகள் தமது தலைவர் பிரபாகரனைத் தேடும் முயற்சியில்! இலங்கைத் தரப்பு கவலையுடன் இந்தியாவிடம் தெரிவிப்பு
[ உதயன் ][ Mar 09 10:33 GMT ]
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள அந்த இயக்கத்தின் முன்னணி அமைப்புகள் ஈடு பட்டுள்ளன எனக் கவலை வெளியிட் டுள்ள இலங்கை, அதனை இந்தியாவிற் கும் தெரியப்படுத்தியுள்ளது. [  ]
முக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் பங்கு அவசியம்: அமெரிக்கா
[ தினமணி ][ Mar 07 05:22 GMT ]
உலகப் பொருளாதார மந்த நிலை, பருவ நிலை மாற்றம், ஆயுதப் பரவல் தடுப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்ற முக்கிய பிரச்னைகளை எதிர் கொள்ள இந்தியாவின் பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா சபையில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளும் ஒத்தக் கருத்துடன் செயல்பட்டு வருகின்றன. [  ]
நிபுணர் குழுவை நியமிப்பது நியாயமற்றது
[ வீரகேசரி ][ Mar 07 03:59 GMT ]
ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவது கோரப்படாததும் நியாயமற்றதுமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. [  ]
நிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு
[ வீரகேசரி ][ Mar 06 11:43 GMT ]
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார். [  ]
மகிந்தவைச் சந்திக்கப் இந்தியக் கலைஞர்கள் போட்டி
[ வீரகேசரி ][ Mar 06 05:36 GMT ]
மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த றாஜபக்சவை அலரி மாளிகையில் நேற்றைய தினம் சந்தித்திருக்கிறார். [  ]
|