மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
312 - கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.
313 - செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
314 - இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
315 - அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
316 - இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
317 - எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
318 - தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோபிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?
319 - பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
320 - நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
Previous Chapter Next Chapter[Thirukural in English] [Thirukural in Tamil] [Thirukural in Details]
Courtesy: We have used Thirukural Tamil interpretations by Dr. M. Karunanithi. The Englist translation was used from the book: TIRUKKURAL with translations in English by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis Published by The South India Saiva Siddhantha Works Publishing Society, Tinnevelly, Limited. India (1982).




