ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.
272 - வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
273 - வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
274 - தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துபுதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
275 - பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.
276 - நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துஉண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
277 - புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிவெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.
278 - மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிநீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.
279 - கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனைநேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
280 - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
Previous Chapter Next Chapter[Thirukural in English] [Thirukural in Tamil] [Thirukural in Details]
Courtesy: We have used Thirukural Tamil interpretations by Dr. M. Karunanithi. The Englist translation was used from the book: TIRUKKURAL with translations in English by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis Published by The South India Saiva Siddhantha Works Publishing Society, Tinnevelly, Limited. India (1982).






