அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
842 - அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.
843 - அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைஎதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.
844 - வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
845 - கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறஅறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
846 - அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.
847 - அருமறை சோரும் அறிவிலான் செய்யும்நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
848 - ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
849 - காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
850 - உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.
Previous Chapter Next Chapter[Thirukural in English] [Thirukural in Tamil] [Thirukural in Details]
Courtesy: We have used Thirukural Tamil interpretations by Dr. M. Karunanithi. The Englist translation was used from the book: TIRUKKURAL with translations in English by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis Published by The South India Saiva Siddhantha Works Publishing Society, Tinnevelly, Limited. India (1982).






