பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.
802 - நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
803 - பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைபழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.
804 - விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
805 - பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கவருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
806 - எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
807 - அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்.
808 - கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.
809 - கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைதொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்.
810 - விழையார் விழையப் படுப பழையார்கண்பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
Previous Chapter Next Chapter[Thirukural in English] [Thirukural in Tamil] [Thirukural in Details]
Courtesy: We have used Thirukural Tamil interpretations by Dr. M. Karunanithi. The Englist translation was used from the book: TIRUKKURAL with translations in English by Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis Published by The South India Saiva Siddhantha Works Publishing Society, Tinnevelly, Limited. India (1982).






