Events

'எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' -

Date: 2012-05-13 at 4:00 pm
Address: சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபம், 2761 Markham Road, Markham, ON Canada
Fee: -

Details:
"எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்"

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் உரையும், கலந்துரையாடலும்

சோவியத் யூனியன் வீழ்ந்த 1989 ஆம் ஆண்டு, நியூயார்க் இரட்டைக் கோபுரம் சரிந்த 2001 ஆம் ஆண்டு என்பன நம் காலத்தின் இரு முக்கியமான நிகழ்வுகள். விடுதலைப் போராட்டங்களின் ஆதர்ஷமான ‘இலத்தீனமெரிக்காவில் ஆயுத விடுதலைப் போராட்டம் என்பது கடந்த காலம், இனி அதற்கு இங்கு இடமில்லை’ எனப் பிடல் காஸ்ட்ரோவும், வெனிசுலா ஜனாதிபதி சாவோசும் 2007 ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.

இன்று நாம் பின் சோவியத், பின்-செப்டம்பர், பின்-புரட்சிகர உலகம் குறித்துத்தான் பேச வேண்டியிருக்கிறது. ஈழப்போராட்டம் உக்கிரமடைந்த போது காணப்பட்ட எழுபதுகளின் அரசியலும் கருத்தியலும் நாற்பது ஆண்டுகளின் பின் தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் “எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்” என்பது எவ்வாறாக இருக்கப் போகிறது? அதனது இலக்கும், வழிமுறையும், வடிவங்களும் எத்தகையதாக இருக்கப் போகிறது?



Contact:
Name: -
Phone: 647 237-3619
Email: -