Events

மண்வாசனை - கனடியத் தமிழர் தேசிய அவை

Date: 2012-05-05 at 5:30 pm
Address: Glenforest Secondary School, 3575 Fieldgate Drive , Mississauga, ON Canada
Fee:

Details:
எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.

தாயகத்தில் இருந்து கோரப்பட்டுள்ள உடனடித் தேவைகளிற் சில:

• கடந்த கால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு - இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - நெஞ்சுக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் • பராமரிப்பு நிலையத்திற்கான பராமரிப்புச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன. கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களை பராமரிப்பதற்கு முழுநேரப் பராமரிப்பாளர்களை ஏற்பாடுசெய்து அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியுள்ளது.

• மீளக் குடியமர்த்தப்பட்ட இடங்களில் பெற்றோர்களை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கான உதவியும் கோரப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் உடனடியாக கோரப்பட்டுள்ள உதவிகளாகும்.

எமது உறவுகளின் உடனடித் தேவைகளைப் நிவர்த்திசெய்யும் முகமாக மண்வாசைன எனும் நிகழ்வு நடைபெற உள்ளது.

Contact:
Name: NCCT
Phone: 416-646-7624
Email: info@ncctcanada.ca