கொலஸ்ரோல், வெல்லம் ஆகியவற்றை நோயாளிகளிடம் குறைவடையச் செய்வதற்கு பனம்பழத்திலிருந்து மருந்து

ஆக்கம்: உயிரி இரசாயனவியல் பேராசிரியர் பொன்னுச்சாமி நவரட்ணம்
பனம்பழத்தின் திண்ம மீதியிலிருந்து கொலஸ்ரோல், வெல்லம் ஆகியவற்றினை நோயாளிகளிடம் குறைக்கும் மருந்தினை உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் பனம் பழக் கழிவுகளினால் நிலம், நீர், வளி என் பன மாசடைவைத் தடுக்கும் வழிமுறை யையும் கண்டுபிடித்துள்ளேன்.

கடந்த 3 சகாப்தகால போர் நடவடிக் கையிலும் இடப்பெயர்வாலும் வடமாகா ணத்தின் உயிரி இரசாயனத்துறை தொடர் பான தொடர் ஆராய்ச்சி இடம் பெற்றது.

இதன் பயனாக சாவகச்சேரி அல்லாரையில் உள்ள பனங்கள்ளை "பியர்' ஆக்கும் முயற்சியும், கண்டாவளையில் பத நீரை போத்தலில் அடைக்கும் நடவடிக் கையிலும் யாழ்ப்பாணத் திராட்சையில் இருந்து "வைன்' உற்பத்தியிலும் நாம் வெற்றிகண்டோம்.

உயிரி இரசாயனவியல் பேராசிரியர் கலாநிதி பொன்னுச்சாமி நவரட்ணம் இவ் வாறு தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணம் வந்தி ருந்த அவர் மேலும் தெரிவிக்கையில்:

யாழில் அமிலோசு நொதியத்தை "இலைக் கன்' எனும் கூட்டு அங்கிமூலம் பெறும் முறையை அறிமுகப்படுத்தினேன். இது மாப்பொருளை மோல்ரோசு வரை உடைக்கும் இந்நொதியம் தானியங்களில் இருந்து மோல்ரோசுவை தந்து அதிலி ருந்து குளுக்கோசு பெறவும் மதுவத்தாக் கத்தினால் வைன், பியர் என்பவற்றின் உற் பத்திக்கும் உதவியது.

இவ்வாறு பல்வேறு உயிரி இரசாயன வியல் ஆராய்ச்சிகள் மூலம் வடபகுதி கடந்த காலங்களில் முன்னின்றபோதும் அத்தகைய கண்டுபிடிப்புக்களை "நிலைத் திருக்கக் கூடிய' அபிவிருத்திக்கு பயன் படுத்த முடியாத சூழலே காணப்பட்டது. தற்போது நாடளாவிய ரீதியில் அமைதி நிலவுகின்றது. மேலும் பல்வேறு அபிவி ருத்திகள், கண்டுபிடிப்புக்கள் இடம்பெறு வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன.

இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங் கத்தின் சூழல் மாநாட்டில் யாழ்.மண் ணில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பனம் பழங்களில் உள்ள நுண்ணங்கிகளின் நொதியச் செயற்பாட்டால் தோன்றும் துர் நாற்றம் வளியையும் அதிலுள்ள பல வகைச் சேதன அமிலங்கள் மண்ணையும், மழை காலங்களில் நீருடன் கரைந்து நீர்நிலை களையும் மாசடையச் செய்கின்றன என் றும் இம் மாசடைதலைத் தடுக்க பழங்க ளில் உள்ள வெல்லத்தை நீர்க்கரை சலாகப் பிரிக்கும் முறையைக் கூறிய தோடு திண்மமீதியை உலரவைத்துத் தூளாக்கி வில்லையாகவோ அல்லது உறையுள் அடக்கிய "கப்ஸ்யூலாகவோ' நோயாளிக்குக் கொடுக்கும்போது அதிலுள்ள கரையும் நார்களினால் குருதியின் கொலஸ்திரோல், வெல்லம் (சீனி) ஆகியன குறையும் என்ற தொழிற்பாட்டை விளக்கினேன்.

இதற்காக, இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கலாநிதி டபிள்யூ.எல்.சுமதிபாலவினால் "தேசிய விருது" வழங்கிக் கௌரவிக்கப்பட்டேன்.

இவ்வாறு நமது வளத்தை நமது தொழில் நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தினால் எமது நாடும்எமது பிரதேசமும் தானாக வளரும் என்றார்.

"ஸ்பெயின்" நாட்டின் திரித்துவப் பல் லைக்கழகத்தின் உயிரிஇரசாயனத்து றையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்காக அண்மையில் பேராசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்டவர் கலாநிதி பொன்னுச்சாமி நவரட்ணம். அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயனத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please Click here to login / register to post your comments.