தமிழ் அகதிகளுக்கு சரஜீபோவிலிருந்து பாடங்கள்

எனது சொந்த நகருக்கு திரும்பிச் சென்று எனது குடும்ப மயான கல்லறையை சுத்திகரித்தேன். நண்பர்களை சந்தித்தேன்.அவர்கள் அனைவரும் அநேகமாக எழுத்தாளர்களாகும். அவர்கள் ஒருபோதும் சரஜீபோவை விட்டு வெளியேறியிருக்கவில்லை. முற்றுகையிடப்பட்ட தருணத்தில் நகைச்சுவையாகக் கூறப்பட்ட விடயத்தை கேள்வியுற்றேன். மோதல் இடம்பெற்ற நகரத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு ஒரே வழியாக விமானநிலையத்தின் ஓடுபாதையின் கீழான சுரங்கப் பாதை இருந்ததாக பகிடியாகக் கூறப்பட்டது.

இந்த சுரங்கத்தின் நடுவில் இரு சகோதரர்கள் எதிரெதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். இருவரும் பாதையில் சந்தித்தபோது ஒரே விதமாகச் சத்தமிட்டனர். எங்கேயுள்ள நரகத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறாய்? அங்கு ஒன்றுமில்லை என்று இருவரும் ஒருவரையொருவர் கேட்டுள்ளனர். அந்தக் கேள்வியின் கனதியை இப்போதும் நான் உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

வன்கூவர் கரையை தமிழ் அகதிகள் வந்தடைந்திருப்பது பற்றிய செய்திகளை நான் அவதானித்தேன். எனக்கு சரஜீபோவின் முற்றுகை நினைவுக்கு வந்தது. அந்த முற்றுகையானது லெனின் கிராட் முற்றுகையிலும் பார்க்க நீண்ட காலத்திற்கு நீடித்திருந்தது. அந்த முற்றுகையில் தப்பிப்பிழைத்த ஒவ்வொருவரிடமும் கூறுவதற்கு சொந்தமான கதைகள் உள்ளன. அங்கு கொல்லப்பட்ட 10 ஆயிரம் பேரில் சிலரின் சார்பாக நான் அவற்றை பிரசுரித்துள்ளேன். சினைப்பர் தாக்குதல்கள் , கிரைனைட் வீச்சுகள், பட்டினி என்பவற்றால் இந்த 10 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டிருந்தனர். நான் கூட ஒரு தடவை கொல்லப்பட்டிருந்தேன் அதாவது, பத்திரிகையொன்று 1992 இல் நகரில் இடம்பெற்ற குண்டுவீச்சில் பலியானோரின் பட்டியலில் எனது பெயரையும் பிரசுரித்திருந்தது. 3 வருடங்கள் துன்பங்கள் தொடர்ந்தன.

அன்றைய நாட்களில் வீதிகளில் பிசாசு நடமாடியது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் இப்போதும் உயிருடன் தான் இருக்கின்றேன் என்றும் அயலவர்களுக்கு எனது நண்பர்களுக்கும் கூறுவதற்கு முயற்சி செய்ய வேண்டியிருந்தது. எனது இரு பிள்ளைகளும் திகிலடைந்திருந்தனர். நகரத்தில் உணவு விநியோகம் துண்டிக்கப்பட்டதன் பின்னர் எமது குளிர்சாதனப் பெட்டி காலியாகிவிட்டது. பிள்ளைகள் எமது வீட்டுக்கூரையின் துவாரத்தால் வழியும் மழைநீரை ஏந்துவதற்கு கற்றுக்கொண்டிருந்தனர். தொலைத்தொடர்பு கட்டிடம் மின்சக்தி விநியோகத்தை துண்டித்துவிட்டது. அதனால், தொலைபேசி இணைப்பு செயலிழந்து விட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் சாதாரணமான வெடிச்சத்தம் கேட்டாலும் வயிற்றை பிசைந்தது. ஏனெனில், முன்னர் நாங்கள் உண்மையான குண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டிருந்ததில்லை.

எனது 3 வருட துன்பியல் காலத்தைப் பற்றிக் கதைத்தால் என்னும் 3 வருடங்கள் எனக்கு எனது குடும்பம் நான் தொலைத்த நண்பர்கள் பற்றி கூறுவதற்கு மேலதிகமாக தேவைப்படுகிறது. சரஜீபோ முற்றுகையின் போது எனது எழுத்தின் இரட்டைத் தன்மை குறித்து நான் உணர ஆரம்பித்தேன். கவிஞரான நான் சாட்சி ஒருவரின் உண்மையான தன்மையை வெளிப்படுத்த விரும்பியிருந்தேன். மறு புறத்தில் எனது வாழ்க்கையின் முழுமையான பகுதியை மறந்துவிட முயற்சித்தேன்.

திரும்பவும் நான் இடைநடுவில் சிக்கியிருந்தேன். மொன்றியலில் கவிதையொன்று வாசிக்கும் நிகழ்வொன்றின் போது சபையில் இருந்த பெண் ஒருவர் என்னிடம் நீங்கள் எப்போதாவது மருத்துவரிடம் கதைத்துள்ளீர்களா என்று கேட்டார். கனடாவிற்கு நான் வந்த பின்னர் அதனைச் செய்தீர்களா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இல்லையென்று கூறினேன். ஏனென்றால் அதனைவிட எனது வாசகர்களிடம் கதைப்பது மிகவும் இலகுவான விடயமாக இருந்தது. பின்னர் அந்தப் பெண்ணிடம் தனிப்பட்ட முறையில் கதைத்தேன். தனது தோள்பட்டையில் இருந்த காய வடுக்களை அப்பெண் காட்டிய போது நான் வெட்கப்பட்டேன். பாகிஸ்தானிய நகரமொன்றில் இடம்பெற்ற குண்டுவீச்சின் போது அப்பெண்ணிற்கு காயமேற்பட்டிருந்தது. அந்தப் பெண் எந்த நகரத்திலிருந்து வந்துள்ளார் என்பது குறித்து அதாவது, அந்த நகரத்தின் பெயரை நான் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லை.

அப்பெண்ணின் கேள்விக்கு நான் பகிடியாக பதிலளித்தது குறித்து மன்னிப்புக் கேட்டேன். அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டது குறித்து பதிலுக்கு அப்பெண் மன்னிப்புக் கேட்டார். சடுதியாக நாங்கள் நாகரீகமான கனடியர்களாக மாறிவிட்டோம். கனடியர்கள் ஏனைய நாடுகளின் செய்திகளைப் பற்றி அறியாதவர்களாக இருந்தார்கள்.

உங்களின் அயல் புறத்தில் பிரச்சினைகள் இல்லையென்று நீங்கள் மறுக்கும் போது அதே பிரச்சினை உங்கள் கதவைத் தட்டும் போது உணர்ந்துகொள்வது வழமையாகும். உங்களிடம் நம்பகரமான வரலாறு உண்டா என்று ரொறன்டோவில் உள்ள வங்கி எழுதுவினையர் ஒருவர் கேட்டார். நான் சரஜீபோவிலிருந்து இரு பிள்ளைகளுடன் உடைந்துபோன எனது முன்னாள் வாழ்வுடனும் ரொறன்டோவை வந்தடைந்திருந்தேன். நான் பிரசுரித்த நூல்கள் பெறுமதியானவை அல்ல என்று உணர்ந்து கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கவில்லை.

வங்கியிலிருந்து கடனை நான் பெறப்போவதில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அதாவது, எனது பணி தொடர்பாக கடனைப் பெற்றக்கொள்ளப்போவதில்லையென்பதை அறிந்திருந்தேன். விசேடமாக சேர்போ குரோசியன் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் எனது பழைய நாட்டில் தடைசெய்யப்பட்டிருந்தன. அவை 5 பாகங்களாக துண்டாடப்பட்டு விட்டன.

உங்களிடம் நம்பகரமான வரலாறு உள்ளதா என்று வங்கி எழுதுவினையரால் என்னிடம் கேட்கப்பட்டது. தனக்கு முன்னால் சிறிது காலத்திற்கு முன்னர் தான் விடுவிக்கப்பட்ட வங்கிக் கொள்யைர் அல்லது மனம் பாதிக்கப்பட்ட ஒருவர் நிற்பதாக அந்தப் பெண் நினைப்பதாகத் தென்பட்டது. அந்தக் கணத்தில் எனது மனதில் ஏற்பட்ட வலி எனக்கு வழிகாட்டியாக அமைந்தது. கடன் பெறுவதற்குப் பதிலாக கூலித் தொழிலாளாராக வேலையொன்றைப் பெற்றுக்கொண்டேன். வாகனங்களில் பொதிகளை ஏற்றுவது இறக்குவது எனது வேலையாகும். மருத்துவர்கள் இந்த வேலையை கைவிடுமாறு கூறும்வரை பல வருடங்களாக இப்பணி தொடர்ந்தது.

பின்னர் நான் முழுமையான கனடியப் பிரஜையாகிவிட்டேன். எனது, முதலாவது தலைமுறை கனடியர் ஒருவருடன் உணவு பொருட்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தேன். நலன்புரி காசோலைகளைப் பெறுவதற்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. வேலையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு நலன்புரி எழுதுவினையர்கள் என்னைக் கேட்பதையும் கிரகித்துக் கொள்ளவேண்டியிருந்தது.

முற்றுகையிடப்பட்டிருந்த காலத்தில் நாங்கள் பெற்றிருந்த மனிதாபிமான நிவாரணம் பல்வேறு வகைப்பட்டதாக இருந்தது. அங்கு நீண்ட நேரம் உணவுக்காக காத்திருந்திருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது உங்கள் பைகளில் குறைந்தது சில சன்னங்களையாவது கண்டுகொள்ள முடியும். இந்த யுத்த கால சின்னங்களை உங்கள் குழந்தைகள் சேகரித்து வைத்திருப்பதை ஆச்சரியத்துடன், பார்க்க முடியும்.

கனடியராக வருவதற்கு நான் தவறவிட்டிருந்தால் போலந்தைச் சேர்ந்த அனாவின் கதையை நான் ஒருபோதுமே கேட்டிருக்க மாட்டேன். உணவு வங்கி சமையலறைக்கு முன்னால் காத்துக்கொண்டிருக்கும் போது அப்பெண் தனது கதையைக் கூறினார். மூன்று உணவு விடுதிகளில் அப்பெண் சுத்திகரிப்பு வேலைகளைச் செய்து வந்தார். தனது பிள்ளைகள் புல்லாங்குழல் கற்றுக்கொள்வதற்காக பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதற்காக இந்த விடுதிகளில் வேலை செய்வதாகவும் அவர் கூறியிருந்தார். அதேசமயம், மெக்ஸிக்கோவைச் சேர்ந்த இளைஞரான றுல்போ தனது கதையை என்னிடம் கூறினார். தனியார் கிளப்பொன்றில் மல்யுத்த விளையாட்டுகளின் போது பந்தயம் கட்டுவோரிடம் தான் சம்பாதிப்பதாக அவர் கூறியிருந்தார். அவருக்கு தனது விலாசம் தெரியாது. ஏனெனில், எப்போதுமே அவர் தனது கண்களை மூடிக் கட்டிக் கொண்டிருந்தார். சில சமயம், 500 டொலர் சம்பாதிப்பார். சில தடவை இதன் இரண்டு மடங்கு தொகையை நட்டமடைந்திருப்பார்.

நான் கனடாவுக்கு வந்திராவிடின் “நாங்கள் என்பதற்கும் அவர்கள் என்பதற்கும் இடையிலான கண்ணுக்குப் புலப்படாத பாரிய வேறுபாட்டை நான் அறிந்திருக்க மாட்டேன். தற்போது கனடியனாக இருக்கும் நான் சில நூல்களை பிரசுரித்துள்ளேன். எனது வாசகர்களுக்கு இந்த நூல்கள் பாதிப்பை ஏற்படுத்தின. அண்மையில் குடியேற்ற வாசிகளாக வந்தவர்களின் கடிதங்கள் மூலம் இவற்றை அறிந்துகொண்டேன். குடியேற்ற வாசியான நான் மிகவும் நலிந்த வர்க்கத்தைச் சார்ந்தவர் என உணருகிறேன். உலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் தமது சொந்த இடத்திலிருந்து வெளியேறி வித்தியாசமான கடவுச்சீட்டை கொண்டிருக்கின்றனர். எனது பொஸ்னிய கடவுச்சீட்டு காலாவதியான பின்னர் நான் அதனைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை. ஆன்மாவைப்பற்றி புள்ளிவிபரவியலாளர்களுக்கு என்ன தெரியும்.

இந்தக் கோடை காலத்தில் சரஜீபோவானது திரைப்பட விழா நிகழ்வில் உலகளாவிய ரீதியிலிருந்து திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்திருந்தது. உலகெங்கிலுமுள்ள பொஸ்னியர்களுக்கு நகரம் செங்கம்பள வரவேற்பளித்தது. யுத்தத்துக்கு முன்னர் அங்கிருந்த மக்களில் 1/3 பகுதியினர் இப்போது அவுஸ்திரேலியா, கனடா, சுவீடன் போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்ற முத்திரையை காவிச் செல்லுகின்றனர். அவர்கள் பருவ கால பண்ணைத் தொழிலாளர்கள் போன்று உள்ளனர். சில ஞாபகங்களுடன் அறுவடைக்கு திரும்பிசெல்வது போன்ற உணர்வுகளுடன் அவர்கள் காணப்படுகின்றனர். அதேசமயம், பொஸ்னிய மொழியிலும் பார்க்க ஆங்கிலத்தில் தமது பிள்ளைகள் சிறப்பாக தொடர்பாடல்களை மேற்கொள்வது தொடர்பாக அதிசயிக்கின்றனர். எனது நண்பரும் கவிஞருமான ஆஸீம் பில்காவின் வார்த்தைகள் அடங்கிய கூர்மையான செய்தியை அவர்கள் சிந்திக்கின்றனர்."யுத்தத்தில் தாங்கள் உயிர் தப்பி விட்டதாக நம்புவோரை சமாதானம் கொன்று விடுகிறது%27

ஏன் இங்கு வந்திருக்கிறாய்? என்று சிலர் கேட்பதற்கு முன்னால் எனது சிந்தனைகளை முடிவுக்குக் கொண்டுவருவது சுலபமான வழியாக இருக்குமென்று என்னால் நினைக்க முடியும். அதாவது, கனடாவில் எனது வாழ்வின் கடுமையான பகுதியைப் பற்றி நான் சிந்திப்பதற்கு முன்னால் எனது சிந்தனையை முடிவுக்குக் கொண்டுவருவதே சுலபமான வழியாக இருக்கும்.

இவ்வாறு கோரன் சைமிக் டொன் பிக்ஸன் என்ற எழுத்தாளர் கனடிய பத்திரிகையான குளோப்ன் அன்ட் மெயிலில் எழுதியுள்ளார். கனடாவை தமது இல்லமாக கொள்வதற்கு தான் நடத்திய போராட்டத்தை அவர் நினைவுகூருகிறார். புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய செய்திகளை அவதானித்த பின்னர் கோரன் சைமிக் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

Please Click here to login / register to post your comments.