புலம்பெயர் தமிழ்ச் சமூகம் குறித்து ஒரு விசாரணை

விடயத்திற்கு செல்லுவதற்கு முன்னர், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறேன். உலகம் தட்டையானது என்பது பண்டைய கிறிஸ்தவ நம்பிக்கை. அதனை தனது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கலிலியோ கலிலி பொய்பித்தார். இது குறித்து அப் போது மரணப்படுக்கையில் கிடந்த இரண் டாம் போப்பாண்டவர் கலிலியோவை அழைத்து, நீர் உனது கருத்துகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார். அதனை கவனமாக செவிமடுத்த கலிலியோ ஆம் ஐயா அப்படியே செய்கிறேன் ஆனால் ஒன்று நான் எனது கருத்துக்களை மாற்றி எழுதினாற் போல் உலகம் சுற்றாமல் விடப்போவதில்லை என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இது போன்றுதான் சில விடயங்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பும் போது அது சில அன்பர்களுக்கு அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தலாம். அவர்கள் ஆதங்கப்படுகிறார்களே என்னும் தமிழ்ச் சென்றிமென்பாங்கில் நாம் உண்மைகள் குறித்து பேசாமல் விட்டுவிடுவதால் மட்டுமே அந்த விடயங்கள் நம்மத்தியில் இல்லை என்று ஆகிவிடாது. இதனை நமது தமிழ்த் தேசிய பக்தர்கள் அனைவரும் நினைவில் இருத்திக் கொள்வது அவசியம்.

புலிகள் பலம்பொருந்திய சக்தியாக இருந்த காலத்தில் அவர்கள் குறித்து எந்தவொரு விமர்சனங்களுக்கும் இடமளிக்கப்படவில்லை. அது ஒரு வகையில் மரண விளையாட்டு. ஒருவர் தனது முடிவைத் தெரிந்து கொண்டே இயங்கும் நடைமுறை. ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்களற்ற நமது அரசியல் செயற்பாடுகள் இறுதியில் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பது பற்றி நாம் நன்கு அறிவோம். விமர்சனங்களை துரோகி என்ற சொல் கொண்டு அளவிடும் நமது முதிர்ச்சியற்ற அணுகுமுறையிலிருந்து இனியாவது நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டால் எஸ்.ஜே. வி. செல்வநாயகம் சொன்ன அந்த கடவுள் கூட நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

இனி விடயத்திற்கு வருவோம். ஐஇஇ எனப்படும் சர்வதேச முரண்பாட்டு ஆய்வுக் குழு தனது சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்றில் புலம்பெயர் சமூகம் ஒவ்வொரு வருடமும் விடுதலைப்புலிகளுக்கு, சுதந்திர தமிழீழ அரசுக்காக சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிவந்ததாக குறிப்பிடுகின்றது.(கூடஞு ஈடிச்ண்ணீணிணூச் ஞிணிணtணூடிஞதtஞுஞீ ச்ண ஞுண்tடிட்ச்tஞுஞீ $200 ட்டிடூடூடிணிண ச் தூஞுச்ணூ tணி tடஞு கூடிஞ்ஞுணூண் ச் (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ இணூடிண்டிண் எணூணிதணீண் ஐஇஎ) கூடஞு குணூடி ஃச்ணடுச்ண கூச்ட்டிடூ ஈடிச்ண்ணீணிணூச் ச்ஞூtஞுணூ tடஞு ஃகூகூஉ, ணீச்ஞ்ஞு2)

அவ்வாறான தமிழ் புலம்பெயர் சமூகம் (கூச்ட்டிடூ ஈடிச்ண்ணீணிணூச்) இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றது. அதன் சிந்தனைப் போக்கு எவ்வாறு அமைந்திருக்கின்றது?

போராட்ட காலத்தில் புலம்பெயர் சமூகம் கணிசமான பங்களிப்புகளை வழங்கிவந்திருக்கிறது என்பது உண்மையே. இங்கு கணிசமானவை என்பதன் அர்த்தம் அனைத்து பங்களிப்புகளுமே ஆக்கபூர்வமானதுதான் என்ற பொருள் கொண்டதல்ல. குறிப்பாக புலம்பெயர் சமூகத்தின் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் உணர்வெழுச்சி இருந்த அளவிற்கு அறிவு பூர்வமான அணுகுமுறைகள் இருந்ததா என்பது கேள்வியே! புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அறிவு பூர்வமான அணுகுமுறை இருந்திருக்குமானால் அல்லது அவ்வாறானதொரு அறிவுசார் செயற்தளத்தில் அவர்கள் இயங்கி வந்திருப்பார்களானால் புலிகளின் அழிவுக்கு பின்னர் இந்தளவிற்கு குழம்பவும் ஒரு வட்டத்திற்குள் இருந்தவர்களே ஆளையாள் விமர்சிக்கும் கையறு நிலையும் ஏற்பட்டிருக்காது. புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமது போராட்டங்களில் புலிகளை முதன்மைப்படுத்திய அளவிற்கு எங்கும் மக்களை முதன்மைப்படுத்தியிருக்கவில்லை. புலிகளின் தலைமை முதன்மைப்படுத்தப்பட்ட அளவிற்கு மக்களின் உயிர்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. புலம்பெயர் சமூகத்தின் போராட்டங்களில் ஒரு எல்லைகடந்த மக்கள் போராட்டத்திற்கான நம்பிக்கை தரக் கூடிய எந்த அசைவுகளும் தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் புலிச் சாயமே பூசப்பட்டது. இது புலம்பெயர் செயற்பாட்டாளர்களிடமிருந்த மிகப் பெரும் பலவீனமாகும். இன்றும் கூட இந்த பலவீனத்தை நிவர்த்தி செய்ய முயன்றதாகத் தெரியவில்லை. ஒரு போராட்ட சூழலில் முன்னணி அமைப்பொன்றின் முக்கியத்துவம் குறித்து முரண்பட ஏதுமில்லை. ஆனால் அமைப்பா மக்களா என்று வரும்போது எப்போதும் மக்களே முதன்மையானவர்கள். மக்களுக்காகத்தான் அமைப்பே தவிர அமைப்பிற்காக மக்கள் அல்ல. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக நமது தேசிய அரசியலில் மக்கள் எப்போதுமே இரண்டாம் பட்சமானவர்களாகவே கருதப்பட்டனர். இந்த தொற்று நோயின் வெளிப்பாடுதான் புலம்பெயர் சமூகத்தின் போராட்டத்திலும் பிரதிபலித்தது.

1990 களுக்கு பின்னரேயே இந்த தமிழ் புலம்பெயர் சமூகம் ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான இடத்தைப் பெறுகிறது. இந்தியபுலிகள் மோதலைத் தொடர்ந்து புலிகள் இந்தியாவில் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்தே புலிகள் தமது போராட்ட பின்தளத்தை மேற்கு நோக்கி இடம்மாற்றினர். இதன் பின்னர்தான் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர் தேசிய அரசியலில் ஒரு நிர்ணயகரமான சக்தியாக உருமாறியது. பொதுவாக புலம்பெயர் சமூகம் என்று அழைக்கப்படும் மக்கள் பிரிவினர் அனைவரையும் நாம் அரசியல் கண்ணோட்டத்தில் நோக்க முடியாது. அவர்களை நாம் மூன்று வகையாக பிரிக்க முடியும். தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தீவிர ஆதரவுநிலைச் சக்திகள், ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்றவாறான பிரிவினர் மற்றையது போராட்டத்திற்கு எதிரான பிரிவினர். ஒப்பீட்டளவில் இவர்கள் மிகவும் குறைவானவர்கள்.

புலிகளின் மரபுவழி இராணுவ வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் நிதி அனுசரணையே பிரதான காரணம் என்ற கருத்தொன்றும் உண்டு. அதில் நாம் உடன்பட வேண்டித்தான் வரும். மேற்கின் ஜனநாயக எல்லைகளை விளங்கிக் கொண்ட புலிகள் புலம்பெயர் தளத்தை தமது நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். களத்தில் புலிகளின் தீர்மான அரசியல் எந்தளவு நிர்ணயகரமானதாக அமைந்திருந்ததோ அந்தளவிற்கு புலத்தில் புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய சக்திகள் நிர்ணயகரமான சக்தியாக இருந்தனர். இங்கு புலிகளின் தலைமையின் கீழ் என்று அடிக் கோடிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. புலம்பெயர் தமிழ்த் தேசிய சக்திகள் மேற்கின் சனநாயக நெறிமுறைகளின் நெகிழ்ச்சிக்கு ஏற்றவாறான நமது மக்களுக்கான சுயாதீன அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. அங்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் புலிச் சாயமே பூசப்பட்டது. ஈழத்தின் ஏகத்தலைமை வாதமே புலத்திலும் தொடர்ந்தது. இது என்னவகையான விளைவை ஏற்படுத்தியதென்றால் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் புலிகளுக்கான நடவடிக்கைகளே அன்றி மக்களுக்கான நடவடிக்கைகள் அல்ல என்னும் வாதத்திற்கு ஒருவர் வரும் வகையிலேயே அமைந்திருந்தது. தற்போதைய சூழலில் மீண்டும் நமது அரசியல் இயங்குதளத்தை மீள்கட்டமைப்பு (கீஞுண்tணூதஞிtதணூஞு) செய்வது குறித்து சிந்திக்கும் நாம் இதனை கருத்தில் கொள்வது அவசியம் என்பதையே இந்த கட்டுரை ஆணித்தரமாக முன்வைக்கின்றது.

இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு பிறிதொரு தெளிவான காரணமும் உண்டு. புலம்பெயர் தளம் புலிகளின் கீழ் இருந்ததன் காரணமாகவே புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் அது இந்தளவிற்கு குழம்ப வேண் டிய நிலைமை ஏற்பட்டது. அங்கு சுயாதீன அரசியல் செயற்பாடு இருந்திருக்குமானால் அதன் கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும். அது இன்று ஆதரவற்று வீதியில் கிடக்கும் தமிழீழ மக்கள் குறித்து அக்கறையுடன் செலாற்றியிருக்கும்.

இன்று நமது மக்கள் குறித்து எந்தவிதமான ஆக்கபூர்வமான கரிசனையும் புலம்பெயர் சூழலிலிருந்து இதுவரை வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. இங்கு கரிசனை என்று குறிக்கப்படுவது அவர்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் பற்றியது. அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் சமூகம் ஆக்கபூர்வமாக பங்கு கொள்ளுவது பற்றியது. சிறு உதவிகளைச் செய்வது பற்றி இங்கு நான் குறிப்படவில்லை. அது ஒரு வகையில் வசதி படைத்தவர்கள் வீதியில் கிடப்பவர்களுக்கு பிச்சை போடுவதற்கு சமமானது. இன்று நமது மக்களுக்கு தேவைப்படுவது புலம்பெயர் சமூகத்தின் பச்சையல்ல மீண்டும் நிமிர்ந்தெழுவதற்கான ஊன்றுகோல் பலம். அதனை மேற்கின் சனநாயகச் சூழலுக்குள் தான், தனது குடும்பம் என்ற நிலையில் சிறப்பாக வாழும் புலம்பெயர் சமூகத்தால் செய்ய முடியும். புலிகளுக்கு 200 மில்லியன்களைக் கொடுக்கமுடிந்த நமது தமிழ்த் தேசியத்தின் மீது பேரக்கறை கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களால், இன்று தமிழ்த் தேசியத்திற்காக வீதிக்கு வந்திருக்கும் எமது மக்களுக்கு சில மில்லியன்களையாவது கொடுக்க முடி யாதா?

இன்று புலம்பெயர் தமிழர்கள் செழிப் பாக இருப்பதற்கு களத்தில் புலிகள் மேற்கொண்ட தியாகங்களும் அவர்களுக்கு பிள்ளைகளையும் கொடுத்து பக்கபலமாக இருந்த மக்களும்தான் காரணம். இன்று அவ்வாறான மக்கள்தான் நடு வீதியில் கிடக்கின்றனர். ஆனால் புலிகளின் பிரதான நிதி ஆதாரமாக புலம்பெயர் சமூகம் உருப்பெற்றதைத் தொடர்ந்து ஒருவகையான மேலாதிக்க பண்பரசியல் மாயைக்குள் புலம்பெயர் தமிழ்த் தேசிய சக்திகள் விழுந்தனர். இதன் விளைவே புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் புலிகளின் இடத்தில் தாமே இருப்பதான மாயைக்குள் அவர்களை விழுத்தியது. இந்த மாயையே ஈழத்தில் வீதியில் கிடக்கும் மக்கள் குறித்த எந்த கரிசனையும் அற்று வெற்று சுலோகங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் நிலைக்கும் காரணமாகியது.

இந்த கட்டுரையின் நோக்கம் புலம்பெயர் சமூகத்தை குறை கூறுவதல்ல மாறாக புலம்பெயர் சமூகம் யதார்த்தம் குறித்த புரிதலோடு தமது உறவுகள் குறித்து ஆக்கபூர்வமாக சிந்திக்க முன்வர வேண்டும் என்பதே ஆகும். பல்வேறு தவறுகளோடுதான் நமது கடந்தகாலம் நகர்ந்திருக்கிறது என்ற உண் மையை உணர்ந்து கொண்டு செயலாற்ற முன்வர வேண்டும் என்பதையே இந்த கட்டுரை புலம்பெயர் சமூகத்தின் முன்னால் ஒரு வேண்டுகோளாக முன்வைக்க முனைகிறது.

இன்று கிழக்கில் அபிவிருத்தி அல்லது தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் என்ற போர்வையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை நமது களத்தில் வாழும் மக்களால் பார்த்துக் கொண்டிருக்கவே முடியும். இன்று கொழும்பின் பிரதான மேலாதிக்க இலக்கு கிழக்கே தவிர வடக்கல்ல. இதன்காரணமாகவே தற்போது அபிவிருத்தி என்னும்பேரில் கிழக்கில் பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுக்க முயல்கிறது கொழும்பு. இந்த செயல்திட்டங்கள் மேற்பார்வைக்கு எந்த விஸ்தரிப்பு நோக்கத்தையும் கொண்டிருக்காது. எனவே அதனை அரசியல் அர்த்தத்தில் நாம் விளக்கவும் முடியாத நிலைமை ஏற்படும். தொழில் முயற்சிகளுக்காக அரச காணிகளை வழங்கும் போது அது குறித்து நாம் விமர்சிக்க முடியாது. இதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் நாமும் முதலீட்டு முயற்சிகளில் இறங்க வேண்டும். இதனை களத்தில் இருக்கும் பொருத்தமான நிறுவனங்கள், பொருத்தமான நபர்கள் கொண்ட குழுக்கள் ஆகியவற்றைக் கொண்டு நாமும் இதில் தலையீடு செய்ய வேண்டும். இதனை புலம்பெயர் சமூகம் செய்ய முடியும்.

இன்று கிழக்கின் கரையோர நிலங்களை உல்லாச விடுதிகள் அமைக்கும் நோக்கில் கொழும்பைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர்கள் கொள்வனவு செய்து கொண்டிருக்கின்றனர். அனைத்தும் தனியார் காணிகள். ஒருவர் பணம் கொடுத்து தனியார் காணி களை வாங்கும் போது அதற்கு நாம் என்ன மேலாதிக்க அரசியல் விளக்கம் கொடுப்பது. கொடுத்தாலும் அதில் ஏதாவது தர்க்கம் இருக்க முடியுமா? ஆனால் நமது மதிப்புக்குரிய புலம்பெயர் சமூகத்திற்கு ஒப்பந்த காலத்தில் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அன்று தூர நோக்கில் முடிந்தளவு தனியார் காணிகளை நாம் வசப்படுத்தியிருந்தால் இன்று அவைகளை சிங்களவர்கள் வாங்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. நாமோ யூதர்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தோம். ஆனால் யூதர்கள் பலஸ்தீனியர்களின் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி தமது நில ஆதிக்கத்தை பெருக்கிக் கொண்டது குறித்து நம்மால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் கொழும்பில் நமது யாழ்ப்பாண அன்பர்களால் அடுக்கு மாடிகள் வாங்க முடிந்தது. இதற்கும் ஏதாவது அரசியல் விளக்கம் இருப்பின் தயவு செய்து அதனைச் சொல்லுங்கள். இன்று ஏதோவொரு நாட்டில் இருந்து கொண்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அறிக்கை விடுவது இலகுவானது. இந்த விடயம் கூட, இனியாவது புலம்பெயர் சக்திகள் தங்களது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை விளங்கிக் கொண்டு செயற்பட முன்வர வேண்டும் என்ற நோக்கிலேயே முன்வைக்கப்படுகின்றது.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு புலம்பெயர் சக்திகள், வீதியில் கவனிப்பாரற்று கிடக்கும் நமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் செலாற்ற வேண்டியது அவசரமானது, எந்தவகையிலும் நிராகரிக்க முடியாதது என்பதையே இந்த கட்டுரை வலியுறுத்த முயல்கிறது. இது அவசியம் என்பதற்காக ஏனைய அரசியல்ரீதியான முன்னெடுப்புகள் அவசியமானதல்ல என்ற வாதத்தை இந்த கட்டுரை முன்வைக்கவில்லை. அது பிறிதொரு தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதையும் இந்த கட்டுரை ஏற்றுக் கொள்கின்றது.

இதனைத் தட்டிக் கழித்து புலம்பெயர் சக்திகள் தொழிற்பட முடியும். அதற்கான உரிமையும் அவர்களுக்குண்டு என்பதையும் இந்தக்கட்டுரை மறுக்கவில்லை. ஆனால் தமது நலன்களுக்காக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்களை பிச்சைக்காரர்கள் போன்று எண்ணினால் அல்லது நடந்துகொள்ள முற்பட்டால், அத்தகையதொரு நிலையில் புலம்பெயர் தமிழர்களிடம் நமது மக்கள் பிச்சை எடுப்பதைவிட மகிந்த ராஜபக்ஷவிடம் மண்டியிடுவதே மேலானது என இந்த கட்டுரை முன்மொழிகிறது. ஏனென்றால் தாய் பள்ளைகளிடம் பிச்சை எடுக்க முடியாது உரித்துடன் ஆணையிட மட்டுமே முடியும். அந்த ஆணைக்கு கட்டுப்பட்டு பிள்ளைகள் தொழிற்பட வேண்டும்.

முதலாவது பெண் கரும்புலிப் போராளியான அங்கையற்கன்னி, தாக்குதலுக்குச் செல்லும் முன்னர் தனது தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக தகவல் உண்டு. இது அப்போது சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

எனது இறப்பு நல்லூர் கோயில் திருவிழாக் காலத்தில் நிகழ வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் எனது தாயார் திருவிழாக் காலத்தில் கச்சான்கொட்டை விற்றதால் கிடைத்த பணம் எஞ்சியிருக்கும். அதன் மூலம் அவர் எனது இறப்பை நினைவு கூர்ந்து நண்பர்களுக்கு உணவு கொடுக்க முடியும்.

இப்படிப்பட்டவர்களின் உறவுகள்தான் இன்று வீதியில் கிடக்கின்றனர். அவர்களது வாழ்வு குறித்துத்தான் நமது மதிப்புக்குரிய புலம்பெயர் சமூகம் கரிசனை கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியும் ஒரு வாதத்தை ஒருவர் வைக்க முடியும். அந்த மக்கள் அவர்களது வாழ்வை தாமாகவே மீளக்கட்டமைத்துக் கொள்வர். எனது புலம்பெயர் நண்பர் ஒருவர் என்னிடம் ஒருமுறை இப்படிக் கூறினார். ஒரு வேளை அவர் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம். அது சரியாக இருக்குமாயின் இப்படி ஒரு வாதத்தையும் நாம் முன்வைக்கலாம். அவர்களுக்கான அரசியலையும் அவர்களே தீர்மானிப்பார்கள்தானே! பின்னர் எதற்கு இடையில் புலம்பெயர் சமூகத்தின் தரகுச் செயற்பாடுகள். எனவே வாதங்களை விடுத்து களநிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயலாற்றுவதே இன்றைய சூழலில் புலம்பெயர் சமூகத்தின் முன்னாலுள்ள வரலாற்றுக் கடமையாகும். அதனை உணர்ந்து அவர்கள் செயலாற்ற வேண்டும் என்பதையே இந்தக் கட்டுரை தீர்வாக முன்வைக்கின்றது

Please Click here to login / register to post your comments.