அறுபதுகளில் இலங்கையைவிடப் பின்தங்கிய தென்கிழக்காசிய நாடுகள் மூன்றின் துரித வளர்ச்சி

வளர்ச்சியடைந்த, வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் கடந்து வந்த பாதைகள் ஏனைய நாடுகளுக்குப் பாடங் களாக அமைகின்றன, அவர்கள் வளர்ந்த வழிமுறை கள், சந்தித்த சவால்கள், அடைந்த சாதனைகள் எமது எதிர்காலத்தை; திட்டமிடப் பெரும் உதவியாக அமையும்.

அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 'நல்லாட்சி" என்ற தலைப்பில் ஓர் சர்வதேச பயிற்சிப்பட்டறையும், கல்விச் சுற்றுலாவும் வடமாகாண சுகாதார அமைச்சினால் சிங்கப்;பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப் பயிற்சியில் வடமாகாண சபையின் உயரதிகாரிகளும், வடமாகாண சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளும், வடமாகாணத்தின் ஐந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். இப் பயிற்சியில் பங்கு பற்றிய அங்கத்தவர் களில் ஒருவர் என்ற ரீதியில் இந் நாடுகளில் படித்த பல பாடங்களையும், பெற்றுக் கொண்ட பல பயனுள்ள அனுபவங் களையும் இப் பயணக்கட்டுரை மூலம் பகிர்ந்து கொள் கிறார் கட்டுரையாளர்.

இம் மூன்று நாடுகளும் 1950 - 1960 களில் எமது நாட்டைவிடப் பின்தங்கிய நிலையிலிருந்தவை. ஆனால், அவை மூன்றும் மிகவும் துரிதமாக வளர்ச்சி யடைந்து எமது நாட்டைவிட எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டன. அவை தற்போதுள்ள நிலையை நாம் அடைய இன்னும் 30 முதல் 50 ஆண்டுகள் தேவைப்படலாம். நாம் அந்த நிலைக்கு வரும்போது அவர்கள் எம்மைவிட இன்னும் 50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றுவிடுவார்கள். இந்நாடு களின் வெற்றியின் இரகசியம் என்ன? அவர்களின் அசுர வளர்ச்சியின் பின்னணி என்ன? நான் அறிந்துவந்த வற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்ற நவீன தேசத்தை கட்டியெழுப்பிய சிற்பியாக முன்னாள் பிரதமர் லி குவான் யூ அவர்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றார். அவரது மகன் தற்போது பிரதமராகப் பணிபுரிந்து வருகின்றார். தற்போது சிங்கப்பூரின் ஜனாதிபதியாகத் தமிழரான நாதன் என்பவர் பதவி வகிக்கின்றார்.

சிங்கப்பூர் ஓர் சுதந்திர நாடாக 1965ஆம் ஆண்டு தான் உதயமானது. அதுவரை மலேசியாவின் ஒரு பகுதியா கவே இருந்து வந்தது. 1965 ஆம் ஆண்டு மலேசியா வினால் தமது அரச கட்டமைப்பிலிருந்து வெளியேற் றப்பட்டது. அப்போது சிங்கப்பூர் மிகப் பின்தங்கிய சேரிகள் நிறைந்த ஓர் பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பு - 692 சதுர கி. மீ. தான.; நீளம் 42 கி.மீ. அகலம் 23 கி.மீ. எமது யாழ்ப்பாண மாவட்டத்தை விட சிறியது (யாழ்ப் பாணம் - 1,025 சதுர கி.மீ) சிங்கப்பூரின் நிலப்பரப்பு யாழ்ப் பாண மாவட்ட நிலப்பரப்பின் மூன்றில் இரண்டு பகுதியாகும்.

நிலவளம்

நல்ல தண்ணீர் இல்லை. குடிநீர்; மலேசியாவிலிருந்தே கொண்டுவரப்படுகிறது. விவசாயம் செய்ய போதிய நிலவளம் இல்லை. கனிய வளங்கள் ஏதுமில்லை. மனிதவளம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அத்துடன் ஓர் துறைமுகமும் இருந்தது.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் தான் சிங்கப்பூர் என்ற நாடு உதயமாகி, தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது. அத்தேசம் உதயமானபோது அப்போது நாட்டில் தலை வராகப் பொறுப்பேற்ற லீ குவான் யூ அவர்கள் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது செய்வதறியாது வார்த்தைகள் வராது வாய் விட்டு அழுதாராம். எந்த ஒரு வளமும் இல்லாத இந்த நாட்டை எவ்வாறு கொண்டு நடாத்தப் போகிறோமென்று தெரியாது திகைத்து நின்றாராம்.

அப்போது"சிலோன்" என்று அழைக்கப்பட்ட இலங்கை சிங்கப்பூரைவிட முன்னேறியிருந்தது. எனவே லீ குவான் யூ அவர்கள் கொழும்புக்;கு வந்து எமது நாட்டின் அனு பவங்களை அறிந்து சென்று சிலோன் போல சிங்கப் பூரை மாற்றுவோம் என உறுதி எடுத்தார்.

இன்று சிங்கப்பூர் எமது நாட்டை விடப் பல வருடங் கள் முன்னணியில் உள்ளது. உலகில் உள்ள வளர்ச்சி யடைந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. சிங்கப்பூர் தனது துறைமுகத்தை உலகின் இரண்டாவது மிகப் பெரிய துறைமுகமாக கட்டி யெழுப்பியுள்ளது உலகின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக காட்சியளிக்கிறது.

சிங்கப்பூரின் சனத்தொகை 3.87 மில்லியன்கள் சராசரி ஆயுள்காலம் - 81.6 வருடங்கள்

இங்கு ஆங்கிலம், சீனம், மலே, தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் அரச மொழிகளாக வழக்கத்திலுள்ளன. இங்கு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாகச் சுற்றுலாத்துறையும், துறைமுகமும் விளங்குகின்றன. சிங்கப் பூருக்குச் செல்வதற்கு முன்கூட்டியே விசா பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. சிங்கப்பூருக்குள் நுழையும்போது தேவைக் கேற்ப குறிப்பிட்டதொரு காலத்திற்கு விசா வழங்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை

இலகுவான, தளர்வான விசா நடைமுறை மூலம் ஏராள மான உல்லாசப்பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர். அவர் களை கவரும் விதத்திலும், அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதமாகவும் திட்டமிட்டு சிங்கப்பூரை அபி விருத்தி செய்துள்ளனர்.சிங்கப்பூர் முழுவதும் உல்லாசப் பயணிகளுக்கான நட்சத்திர விடுதிகள், கேளிக்கை நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. உல்லாசப் பயணிகளைக் கவரும் விதத் தில் மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு கண் கவர் அருட்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிங்கப்பூரை ஓர் சிறந்த கொள்வனவு நிலையமாகவும் (Shopping Center), சந்தைப்படுத்தல் நிலையமாகவும் (Marketing Centre) மாற்றியுள்ளனர். இது மேலும் இங்கு ஏராளமானோர் வந்து செல்வதை ஊக்குவிக்கின்றது. எனவே சுற்றுலாத்துறை இந்நாட்டில் அந்நிய செலாவணி யின் அடித்தளமாகவும், பொருளாதாரத்தின் முதுகெலும் பாகவும் அமைகின்றது.

சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது நாட்டில் சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடிய பல இயற்கைத் தலங் கள் உள்ளன. எமது நாட்டில் சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட முறையில் மேம்படுத்தினால் பொருளாதார ரீதியில் சிறந்த பலனை அடையலாம். உல்லாசப் பயணி களைத் திருப்திப்படுத்தும் சர்வதேச தரத்திலான தங்கு விடுதிகள் அமைக்கப்படவேண்டும். இயற்கை சுற்றுலா மையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளுடனும், வளங்களுடனும் மேம்படுத்தப்பட வேண்டும். எமது சேவை வழங்கல்களை சர்வதேச தரத்திற்கு முன்னேற்ற வேண்டும் இது சம்பந்தமான பயிற்சிகள் இங்கு ஆரம்பிக்கப்பட வேண்டும். ( உ+ ம் Hotel Management)

துறைமுகம்

சிங்கப்பூர் ஆசிய கண்டத்தின் கேந்திர முக்கியத்து வம் வாய்ந்த நிலையத்தில் அமைந்திருப்பதால் உலகின் இரண்டாவது பாரிய கொள்கலன்களைக் கையாளும் துறை முகமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வரும் கப்பல்கள்; ஆசியாவிலுள்ள ஏனைய துறைமுகங்களுக்குக் கொள்கலன்களை விநியோகிக் கும் ஓர் இடைத்தங்கல் (Transit) துறைமுகமாகவும் இது விளங்குகின்றது. மேலும் புதிய கப்பல்களைக் கட்டும் நிலையமாகவும் கப்பல்களைத் திருத்தும், எரிபொருள்கள் நிரப்பும் வசதிகளையும் கொணடுள்ளது. இவற்றின் மூலம் ஏராளமான அந்நியச் செலாவணி கிடைக்கின்றது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் ஓர் முக்கிய துறையாக விளங்குகின்றது.

எமது நாடு ஆசியாவின் ஓர் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ளது. இங்கும் பல இயற்கையான, செயற்கையான துறைமுகங்கள் உள்ளன. இவற்றைத் திட்ட மிட்ட முறையில் அபிவிருத்தி செய்தால் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்க முடியும்;.

திட்டமிடல்

இந் நாட்டின் வெற்றியின் பின்னணியில் உள்ள மிக முக்கியான இரகசியம் மிகச் சிறந்த துல்லியமான திட்டமிடல், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான தூரநோக்கு தங்களிடம் உள்ள இயற்கை வளங்கள் மிகச் சொற்பமானவை. மட்டுப்படுத்தப்பட்டவை என்பதைத் தெளிவாக மனதில் வைத்துக்கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்கள். இருக்கின்ற சொற்ப வளங்களைக் கொண்டு அதி உச்சப் பயன்பாட்டின் மூலம் அதிகூடிய பலன்களை அடையத் திட்டமிடுகிறார்கள்.

நிலவளம்

இங்கு நிலப்பரப்பு மிகவும் மட்டுப்படுத்தபட்டது. எனவே ஓவ்வொரு அங்குல நிலத்தையும் சரியான முறையில் திட்ட மிட்டே பயன்படுத்துகின்றனர். இங்கு பெரும்பாலான காணி கள் அரச காணிகளாகவே காணப்படுகின்றன. தனியார் காணிகள் மிகக்குறைவு. மிகவும் விலை உயர்ந்தவை.

10,20,30 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூரின் நிலப் பயன்பாடு எப்படி அமைய வேண்டுமென்பதை இப்போதே திட்டமிடுகிறார்கள் இங்கு நிலவளம் மட்டுப்படுத்தப்பட்ட தால் தற்போது கடலுக்குள் மண்ணை நிரப்பி அதன்மேல் கட்டடங்களைக் கட்டிவருகின்றனர். திட்டமிடும் போது 10,20,30 வருடங்களுக்;குப் பின் இருக்கப்போகும் மக்கள் தொகையை மதிப்பிட்டு அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யக் கூடியவாறு இப்போதிருந்தே திட்டமிடுகின்றனர்.

சிங்கப்பூரில் (Urban Authority Gallery) நகர அதி கார அருங்காட்சியகத்தில் தற்போதுள்ள நாட்டின் மாதிரி (Model) காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது எதிர்காலத் தில் எப்படி சிங்கப்பூர் அபிவிருத்தி செய்யப்படும் என்பதையும் மாதிரியாக இங்கு காணலாம்.

சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது நாட்டில் போதிய நிலவளம் உள்ளது. இந்த நிலவளத்தின் அருமையை நாம் உணர்ந்திருக்கிறோமா? அதனைத் திட்டமிட்டமுறையில் நாம் பயன்படுத்துகிறோமா? என்பவை கேள்விக்குறியே. எமது நகரப்புறங்களில் நிலத்தின் அருமையைத் தற்போது உணரத்தொடங் கியுள்ளோம். ஆனால் வெளியே நிலவளம் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ஒரு நகரமாக இருக்கலாம், கிராமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம் நம்மிடம் உள்ள நிலவளத்தை தூர நோக்குடன் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும். 20, 30,50 வருடங்களுக்குப் பின்னர் வரப்போகும் சனத்தொகையின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வாறு திட்டமிட வேண்டும்.

ஒரு வைத்தியசாலையை எடுத்துக்கொள்வோம் அதன் வளாகத்தில் உள்ள நிலப்பரப்பில் எதிர்காலத் தில் அமைக்கப்படவேண்டிய கட்டடங்களைத் தூரநோக் குடன் திட்டமிட வேண்டும். அக்கட்;டடங்களுக்கான நில வரைபடம் (Layout plan) வரையப்படவேண்டும் வைத்தியசாலை கட்டடங்களுக்கான Master plan வரையப்பட வேண்டும்.

அதன் பிரகாரமே எதிகாலத் தில் கட்டடங்கள் அமைக்கப்படவேண்டும.; நிலவளம் மட்டுப் படுத்தப்பட்டிருப்பின் மாடிக்கட்டடங்கள் அமைப்பது பற்றி சிந்திக்க வேண்டும். கட்டடங்கள் அமைக்கப்படும்போது மாற்றுவலுவுடையோர் இக்கட்டடங் களை சுயமாகப் பயன்படுத்தக் கூடியவாறு அமைக் கப்பட வேண்டும். இன்று உலகளாவிய ரீதியில் அதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் எமது பகுதிகளில் கட்டப்படும் பெரும்பாலான கட்டடங்களில் இக்குறை உள்ளது. எனவே நாம் இதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். எமது நகரங்களை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவது பற்றிய தெளிவான திட்டங்கள் எம்மிடம் இருக்க வேண்டும். அவற்றின் அடிப்படை யிலேயே அவை அபிவிருத்தி செய்யப்படவேண்டும். ஆட்சிகள், அதிகாரிகள் மாறலாம். ஆனால் நீண்டகாலத் திட்டங்கள் நிலையானவையாக இருக்கவேண்டும்.

நீர்வளம்

சிங்கப்பூர், நீர் வளம் மிகவும் மட்டுபடுத்தப்பட்ட ஓர் நாடு. இங்கு குடிநீர் வளம் இல்லை. மலேசியாவி லிருந்து குடிநீர் இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும் சிங்கப்பூர் நீர் வளத்திற்காக எந்த ஒரு நாட்டிலும் தங்கி யிருக்ககூடாது, தனது சொந்தக் காலில் நிற்கவேண் டும் என்ற தூர நோக்குடன் திட்டமிட்டு பல திட்டங் களைத் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

மழைநீர்: சேமிப்பு, கடல் நீரிலிருந்து உப்பை நீக்கி குடிநீராக்கல், கழிவு நீரைச் சுத்திகரித்து சுத்திகரிக் கும் தேவைகளுக்காக மீளப்பயன்பாட்டுக்கு உட்படுத்தல், மட்டுப்படுத்தப்பட்ட நிலத்தடி நீரைச் சுத்திகரித்து சிக் கனமாக குடிநீராக மாற்றல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தற்போது மழை நீரைக் கடலில் சேரவிடாது சேமித்து வைக்கும் பல நீர்த்தேக் கங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. இன்னும் சில வரு டங்களில் சிங்கப்பூர் தனது நீர்த் தேவையைப் பூரண மாகப் பூhத்தி செய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

சிங்கப்ப+ரில் நில வளமும் நீர் வளமும் மட்டுப்படுத்தப்பட் டதால் விவசாயச் செயற்பாடுகள் மிகவும் குறைவு. மரக் கறிகள,; பழங்கள் யாவும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது எமது பிரதேசத்தில் ஓரளவு நீர்வளம் உள்ளது. ஆனாலுல் அதனைத் தூர நோக்குடன் சிக்கனமாக பாவிக்கிறோமா என்பது கேள்விக்குறியே. எமது நிலத்தடி நீர் வளம் மட்டுப் படுத்தப்பட்டது. அதனை அளவுக்கதிகமாகப் பாவித் தால் ஒரு காலத்தில் எமது பிரதேசம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயமுள்ளது. எமது பிரதேசத்தில் முன்பு காணபட்ட பல குளங் கள் மழைநீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீரை வளம் செய்தன. ஆனால் இன்று அவற்றில் பல குளங்கள் தூர்ந்து விட்டன. அவற்றை நாம் மீளப் புனரமைக்க வேண்டும். எமது கடல்நீர் ஏரிகளுடாக கடலில் கலக் கும் மழைநீரை இயன்றளவு மட்டுப்படுத்த வேண்டும். ஒவ் வொரு நிறுவனங்களிலும், வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மழைநீர் சேமிப் பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தி யில் ஏற்படுத்தப்படவேண்டும். குடிநீர் தேவைக்காக முழுக்க முழுக்க நிலத்தடி நீரில் தங்கியிராது நீர்த்தேக்கங்களி லிருந்து நீரைச் சுத்திகரித்து வழங்கும் நீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். (தொடரும்.....)

வைத்திய கலாநிதி
ஆ.கேதீஸ்வரன்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,யாழ்ப்பாணம்.

Please Click here to login / register to post your comments.