பஞ்சதந்திரமும் தந்திர பஞ்சமும்

ஆக்கம்: பீஷ்மர்
சர்வதேசிய அரசியல் சம்பவங்களையும் இலங்கையின் அரசியல் விடயங்களையும் அவதானித்துக் கொண்டு வந்தவர்கள் இலங்கையின் அரசியல் பிரச்சினை அதிக சிக்கற்பாடு அற்றவொரு நேர்கோட்டுப் பிரச்சினையாகவே இருப்பதாக கூறிக்கொள்ளும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

அரசியற் பிரச்சினையை கல்விப் பிரச்சினையாகவோ, பல்கலைக்கழக புதுமுகப் பிரச்சினையாகவோ, உத்தியோகங்களுக்கான தெரிவுப் பிரச்சினையாகவோ பார்த்து வந்த நாம் இந்த நாட்டின் பிரச்சினையை தேசிய பிரச்சினையென்று (உண்மையில் அது தான் பயன்படுத்தப்பட வேண்டிய சொற்றொடர்) சொல்லாமல் இனக் குழும பிரச்சினையாக (Ethnic) வந்துவிட்டது! இதில் சிங்கள தமிழ் பிரச்சினையே விவாதிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த சிங்கள தமிழ் நிலைப்பாடுகளில் சிங்கள நிலைப்பாடு அரச நிலைப்பாடாக மாறிவிட்டது. பிரிட்டனில் நிலவும் பெரும்பான்மைவாத அரசியலை தப்பர்த்தம் செது கொண்டு நிரந்தர சிறுபான்மை நிரந்தர பெரும்பான்மையுடைய எமது நாட்டிலே அந்தப் பெரும்பான்மை வாதத்தைப் பேசி சிறுபான்மையினரை ஓரங்கட்டும் அரசியல் 1956 முதல் ஜே.... ஜேயென நடைபெறுகின்றது.

தமிழ் மக்களோ அதுவும் குறிப்பாக வட பகுதி தமிழ் மக்களோ ஒரு காலனித்துவத்துக்கல்ல. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஷ் காலனித்துவங்களுக்கும் பழகிப் போ சமூக அசைவியக்கம் வேண்டுமென்றால் காலனித்துவ போக்கைப் பின்பற்றுதலே உசிதமானது என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தனர்.

இந்த நாட்டின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் நாட்டின் தேசிய உணர்வை சுட்டுவனவாகயிருக்க வேண்டுமென்று ஹண்டி.பேரின்பநாயகம் போன்றவர்களே முதல்முதலில் எடுத்துக் கூறினர். ஆனால் சிங்களத்துவ வாதமோ, பெரும்பான்மை வாதமோ ஜனநாயகமெனக் கூறிக்கொண்டு சிங்களத்தை திணித்து, தமிழுக்கு நியாயமான அந்தஸ்து வழங்கப்பட்டதாக பேசப்பட்டாலும் இந்தியாவின் இடையீட்டுடன் வந்த 1988 அரசியலமைப்பு திருத்தத்திலேயே தமிழ் என்ற பெயர் ஆட்சியமைப்புக்குள் பேசப்பட்டது. இதெல்லாம் பழைய கதை. ஏனென்றால் நாம் எல்லாக் காலத்திலும் ஏதோவொரு வகையில் அரசாங்கத்துடன் இணைந்தே தொழிற்பட விரும்பியிருக்கின்றோம். ஒரு சிலர் தொழிற்பட்டுமுள்ளனர்.

தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் போல் அமைச்சர் பதவியை ஏற்கவில்லை. சிங்களத்தலைவருடன் ஒப்பந்தம் செது அதன் அடிப்படையில் தமிழ் அமைச்சர்கள் சேர்ந்து கொண்டனர். ஆனால் யாராகவிருந்தாலும் பரவாயில்லை. அதிகாரம் கிடைத்து விட்டால் போதும் என்கின்ற நிலைமையும் இல்லாமல் இல்லை. இந்தத் திசை திருப்பத்துக்கு வாப்பாக குமாரசூரியர் என்கின்ற பொறியியலாளரொருவர் அகப்பட்டுவிட்டார் (அவர் பிடித்தும் பின்னர் அவரைப் பிடித்தும்) சில அரசியல் தொங்கல்கள் நடைபெற்றன.

இடதுசாரிகள் சிலர்குமார சூரியரை சில காலம் கலங்கரை விளக்கமாகவே பார்த்தனர். (பின்பு கலங்கரை விளக்கமே கலங்கிப் போ ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து கொண்டது) இது எமது இரத்தத்தின் இனமோ தெரியவில்லை. ஆனால் அண்மை காலத்தில் கட்சி ஸ்தாபனங்களாகவே அரசாங்கத்துடன் சேர்ந்துவிடும் நிலைமை ஏற்பட்டது. இதற்கு மேல் எழுதுவதற்கான துணிவு எந்தவொரு தமிழ் அரசியல் விமர்சகருக்கும் இருக்க முடியாது. நம்மிடத்தில் துணிவில்லையென்பதனால் பிரச்சினை குறைந்து விடுகின்றதாவென்றால் இல்லை.

இதனால் தமிழ் நிலைப்பட்டவர்கள் அரசாங்கங்களோடு சேர்வது வழக்கமாகி விட்டது. தமிழ் மக்களுக்கும் பழகிவிட்டது. சிங்களத் தலைவர்களும் பஞ்ச தந்திரமென்னும் புத்தகத்தைப் படிக்காமலே தமிழர்களைப் பிரித்தாளும் முயற்சியில் வெற்றிகண்டு வந்துள்ளனர். உண்மையில் தமிழர்களென்ற ஒரே குழுமப் பெயருடன் இலங்கையில் இல்லை போலத் தெரிகின்றது. இங்கு யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழரென்று தமிழ் வம்சாவளிகளே உண்டு.

இத்தகைய ஒரு சூழலிலே இப்பொழுது ஒரு மிக முக்கியமான வகைப்பாடு ஒன்று தோன்றியுள்ளது. அதாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்ட தமிழர்கள், தமிழ் குழுக்கள். மற்றது அரசாங்கத்துக்கு எதிரானது. இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் இப்பொழுது ஒருமையில்தான் உள்ளனர். அவர்கள் அந்த நிலைப்பாட்டை விடுவதாக இல்லை. மற்றது அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள "பன்மைக்குள்' பிரச்சினைகள் தோன்றியுள்ளன (தோன்றும் தானே). கிளிநொச்சி முல்லைத்தீவு யுத்தப் பிரதேசத்துக்கு உணவு செல்கின்றது, அரசாங்கம் அனுப்புகின்றது. அங்குள்ள அரச நிர்வாகம் அதனை மக்களிடையே பகிர்கின்றது என தெரிவிப்பது இன்று நேற்று ஏற்பட்ட நிலையல்ல. இனக் குழும யுத்தம் வலுநிலைப்பட்ட காலம் முதலே நடைபெற்று வருவது.

இதில் இரண்டு பக்க நியாயங்கள் உண்டு. இந்த உணவுகள் இல்லாவிட்டால் அங்குள்ள மக்கள் பெரிதும் கஷ்டப்படுவர். ஆனால், அதிலும் பார்க்க பாரதூரமானதென்னவென்றால் இந்த உணவு, கல்வி வழங்கல் மற்றும் சௌக்கிய சேவைகளும் இல்லையென்றால் எந்தத் தொடர்புகளுமே இல்லை. நிலைமை மோசமாகிவிடும். இதுவொரு சுவாரசியமான நிலை. அங்காலும் பேசமுடியாது இங்காலும் பேசமுடியாது.

ஆனால் இப்பொழுது நிலைமை மேலும் சிக்கலாகின்றது. வடக்கிலிருந்து வரும் தமிழ்ப் பிரதிநிதி அமைச்சர் வடக்கின் வளங்கல், தேவைகளை கவனிப்பதிலே கண்ணும் கருத்துமாகவிருக்கின்றார்.

ஆனால், கிழக்கில் நிலைமை சற்று வேறுபட்டது. அங்கு ஒரு மாநில ஆட்சியே வந்துவிட்டது. அதற்கு சில அதிகாரங்கள் தேவை. அத்தியாவசியமும் கூட. அதேநேரத்தில் நாட்டின் அமைச்சரவையிலும் இடம் வழங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் நன்கு பயன்படுத்துகின்றது. ஜனாதிபதி தமிழில் பேசிப்பேசியே இதனைச் செகின்றார். இதனை மொழிப் பிரச்சினையென சொல்லிவிடமுடியாது. இது தொடர்ந்தும் மொழிப் பிரச்சினையல்ல அதிகாரப் பிரச்சினையே. ஆனால், இதற்குமேல் எதையும் எழுதிவிடக்கூடிய அளவுக்கு ஜனநாயக காற்று இங்கு வீசவில்லை. லசந்த விக்கிரமதுங்கவுக்கே வீசவில்லையென்றால் மற்றவர்களுக்கு அதிக சிரமமாகலாம்.

முஸ்லிம் பக்கத்தில் மௌனமே பேராயுதமாக மாறிவிட்டது போல் தோன்றிவிட்டது. இந்த வேளையில் ஒரு விடயத்தை மாத்திரம் அழுத்திக் கூறவே வேண்டும். தமிழர்கள் இலங்கை நாட்டின் பிரிக்கமுடியாத (இன்றியமையாதவொன்று கூட சொல்லலாம்) ஒரு குழுமம். அதற்குள் பிரதேச நலன் வர்க்க நலனென பல நலன்களின் வேட்கை இருப்பதும் நியாயமே. ஆனால், தமிழ் பிரச்சினையொன்று உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

அரசாங்கத்தின் நோக்கமென்னவென்றால் இப்படி செவதன் மூலம் அண்மைக்கால சர்வதேச அழுத்தங்களுக்குப் பதில் சொல்வது போல இருக்கின்றது. நாங்கள் தமிழர் நலன்களை மறக்கவில்லை. தமிழர்கள் சிலர் எம்முடனே இருக்கின்றார்கள். இப்படிச் சொல்வதை எதிர்த்துவிட முடியாது. ஆனால், தமிழர்களின் நலன்கள் நன்கு பேணப்படுகின்றதா என்பதைப் பார்க்க வேண்டுவது இவர்களுடைய கடமையென்று சொல்வது எமது கடமையாகின்றது.

நேற்றைய தினக்குரலில் வந்துள்ள ஜனாதிபதியுடனான தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பின் படம் ஆச்சரியமானதாக வரவேற்கத்தக்கதாகவு ள்ளது. ஆனால், ஒரேயொரு கேள்வி அங்கே முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது படம் வந்துவிட்டது செதி வரவில்லையே. எமது இந்துக் கோவில்களில் பூஜை நிறைவில் மக்கள் ஒவ்வொருவரும் சுபிட்சமாக வாழவேண்டுமென்று குருக்கள் ஐயா சொல்லும் ஒரு சுலோகவரியுண்டு. "சர்லோ ஜனோ சுகினோ பலந்து'

Please Click here to login / register to post your comments.