மாணவர்களின் படிப்புக்குழுக்கள் சில நுட்பங்கள்

ஆக்கம்: பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் தனியாகவும் சில சந்தர்ப்பங்களில் குழுக்களாகவும் சேர்ந்து கற்றல் பணிகளில் ஈடுபடுவதுண்டு. மாணவர்கள் இவ்வாறு சேர்ந்து ஒத்துழைத்துக் கற்பது கல்வியியல் ஆய்வாளர்களால் ஊக்கவிக்கப்படும் ஒரு செயற்பாடாகும். இவ்வாறான படிப்புக் குழுக்கள் (குtதஞீதூ ஞ்ணூணிதணீண்) பல நன்மைகளைப் பயப்பன. இவை பற்றி அறிவதோடு, எவ்வாறு ஒரு படிப்புக் குழுவை ஏற்படுத்தலாம்? வெற்றிகரமான படிப்புக் குழுவின் அம்சங்களும் இயல்புகளும் யாவை? என்பது பற்றிய ஆய்வாளர் கருத்துக்களும் பயனுடையனவாகும். மாணவர்கள் பாட விடயத்தைக் கற்பதோடு, குழுக்களாக இணைந்து கற்கும் நுட்பங்களையும் அறிந்து கொள்ளல் வேண்டும்.

படிப்புக் குழுக்களின் முக்கிய நன்மைகளாவன;

மாணவர்களின் கற்றல் ஊக்கம் சற்று வீழ்ச்சி அடையும்போது, படிப்புக்குழுவானது தேவையான ஊக்கத்தை வழங்கும் குழுவின் மற்ற உறுப்பினர்கள் அவ்வூக்கத்தை வழங்குவர்.

மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியரிடம் ஐயங்களைக் கேட்கத் தயங்குவர். சிறிய குழுவில் அவர்கள் ஐயங்களைக் கேட்டுத் தெரிவது இலகுவாக இருக்கும்.

மாணவர்கள் கற்றலில் அதிக ஈடுபாட்டைச் செலுத்த இக் குழுக்கள் உதவும். ஏனெனில், பிற மாணவர்கள் ஒவ்வொரு மாணவனிடமும் கற்றல் தொடர்பாக எதனையாவது ஒரு விடயம் பற்றி ஆயத்தம் செய்து வர வேண்டுமென எதிர்பார்ப்பர். அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்க முடியாது.

படிக்கும் நேரத்தின்போது பல தகவல்கள், எண்ணக் கருக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும். மாணவர்கள் அவற்றை உன்னிப்பாக கவனித்துக் கேட்பதால் அவர்களுடைய கேட்டல், கிரகித்தல் திறன்கள் விருத்தியுற முடியும்;

ஒரு மாணவருக்கு விளங்காத விடயத்தை மற்றவர்கள் விளங்கியிருப்பர். இதனால், அவர் கவனம் செலுத்தாத புதிய கருத்துக்கள் கிடைக்கப் பெறும்.

மாணவர்கள் புதிய படிப்புப் பழக்கங்களை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

மாணவர்கள் தமது வகுப்பறைக் குறிப்புகளை ஒப்பிட்டு, இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளலாம்.

ஒரு மாணவர் பிற மாணவர்களுக்குப் பாட விடயங்களை விளக்கும்போது அம்மாணவரின் தேர்ச்சி அவ்விடயங்களில் அதிகரிக்கின்றது.

தனியாகப் படிக்கும்போது அலுப்பு ஏற்படச் சந்தர்ப்பம் உண்டு. பிற மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும்போது கற்றல் ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.

படிப்புக்குழுக்கள் தாமாக உருவாவதில்லை. எனவே, அவற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடல் வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்?

சக மாணவர்களுடன் இடைவேளை நேரங்களில் பேசிப் பழகிப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யும்போது பின்வரும் வினாக்களுக்கு "ஆம்' என்ற விடை கிடைத்தல் வேண்டும்.

* அம்மாணவர், குழுவில் சிறப்பாகப் பணியாற்றும் ஊக்கம் உடையவரா? * அவர் பாட விடயத்தை நன்கு விளங்கிக் கொண்டவரா? * அவர் நம்பிக்கைக்கு உரியவரா? * அவர் மற்றவர்களுடைய கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்கக் கூடியவரா? * அவருடன் இணைந்து செயலாற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?

படிப்புக்குழுவில் 35 பேர் வரை சேரும்போது மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். குழு பெரிதாக அமைந்தால் பல பிரச்சினைகள் ஏற்படும். சிறு சிறு குழுக்கள் (இடூடிணுதஞுணூண்) உருவாக இடமுண்டு. சில உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட முன்வரமாட்டார்கள். குழுவை முறையாக நிர்வகிப்பதிலும் சிரமங்கள் உண்டு.

படிப்புக் குழுக்கள் எவ்வாறு, எங்கு, எத்தனை முறை, (கிழமைக்கு) எவ்வளவு நேரம் சந்திக்கும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் சந்திப்பதாயின் இடைவேளைகள் தேவை; 6090 நிமிடச் சந்திப்பும் கலந்துரையாடலும் போதுமானது.

எங்கு சந்திப்பது என்பதையும் தீர்மானித்துக்கொள்ளல்வேண்டும். கவனச் சிதைவுகளுக்கு இடந்தராத இடங்கள் பொருத்தமானவை.

கிழமைக்கு எத்தனை முறை சந்திப்பது? எவ்வளவு நேரம் சந்திப்பது? இவை பற்றியும் தீர்மானிக்க வேண்டும். இரண்டு முறை அல்லது மூன்று முறை சந்திப்பது சிறந்தது. 6090 நிமிட நேர சந்திப்பு மிகச் சிறந்தது.

படிக்குங் குழுக்களின் நோக்கங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல், வகுப்பறைப் பாடக் குறிப்புகளை ஒப்பிடல், பாட நூல்களை வாசித்து விளங்கிக் கொள்ளல் போன்ற நோக்கங்கள் பொருத்தமானவை.

படிப்புக் குழுவுக்கான ஒரு தலைவரைத் தெரிவு செய்து கொள்க; மாறி மாறி ஒரு உறுப்பினர் தலைவர்களாகலாம். நோக்கங்களை அடையும் வண்ணம் குழுவை நடத்திச் செல்வது குழுவின் பொறுப்பாகும்.

முதலாவது சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் உறுப்பினரின் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

படிப்புக்கு முறையாக செயற்படத் தொடங்கிய பின்னர், அது வெற்றிகரமாக இயங்க பின்வரும் அம்சங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு உறுப்பினரும் கலந்துரையாடலில் பங்கு கொள்ள வேண்டும்.

ஒரு உறுப்பினர் கருத்துக்களை வழங்கும்போது இடையூறுகள் இருக்கக் கூடாது.

உறுப்பினர்கள் படிப்புக் குழுவில் பங்கு கொள்ள முன்னாயத்தத்துடன் வர வேண்டும்.

ஒரு உறுப்பினர் எழுப்பும் பிரச்சினையை அனைவரும் கூட்டாக, இணைந்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.

உறுப்பினர்கள் நிகழ்ச்சித் திட்டப்படி பணியாற்றல் வேண்டும்.

உறுப்பினர்களின் விமர்சனங்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.

குழுச் செயற்பாட்டின் முடிவில், அடுத்த குழுச் செயற்பாட்டுக்கு ஆயத்தம் செய்தல் வேண்டும்.

எமது இந்த குழுச் செயற்பாடு பலனளிக்கும் என்ற உடன்பாட்டுச் சிந்தனை தொடர்ந்து பேணப்படல் வேண்டும். அத்துடன் தவிர்க்கப்பட வேண்டும்.

குழுவானது தனது இலக்குகள், நிகழ்ச்சி நிரல் என்பவற்றிலிருந்து விலகிச் செல்லல்;

படிப்புக்குழு பொழுது போக்குக் குழுவாக மாறுதல்.

ஆசிரியர்கள், பாடத்திட்டம் என்பவற்றைப் பற்றிக் குறை கூறுதல்; விமர்சித்தல்,

ஒரு சில உறுப்பினர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தல்

ஆய்வாளர் கருத்தின்படி, எந்தப் பாடமாக இருந்தாலும், மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக அமைத்துப் படிக்கும் போது அதிக அளவில் கற்றுக் கொள்கின்றனர். கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்கின்றனர். வேறு கற்பித்தல் முறைகளை விட இக் குழு முறை அதிகம் பயனுடையது. இவ்வாறான கற்றல் முறை ஒத்துழைப்புக் கல்வி, கூட்டுக் கல்வி, சேர்ந்து கற்றல், படிப்பு வட்டம் அணியாகக் கற்றல், பரஸ்பரக் கற்றல், கற்கும் சமூகங்கள் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையே சில வேறுபாடுகளும் உண்டு.

Please Click here to login / register to post your comments.