வழிப்பறித் திருடர்களைப் போன்று செயற்படும் ஆட்சி அதிகாரத் தரப்பினர்

ஆக்கம்: பேராசிரியர் சுச்சரித்த கம்லத்
* வடக்கு, கிழக்கு யுத்தம் இரண்டு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஒன்று நாம் நாட்டை மீட்டெடுக்கிறோம் என்ற மாயை மூலம் மக்களின் கண்களைக் குருடாக்கிவிட்டு, ஏனைய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியில் தொடர்ந்து இருப்பது. இரண்டாவது ஆயுதக் கொள்வனவு வியாபாரம் மற்றும் செயற்பாடுகள் மூலம் கோடிக்கணக்காக சம்பாதித்தல்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேரோ வஹன்சேகள் தர்ம இராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கான நற்காரியங்களைச் செய்வதற்காக அவர்களுக்கு தீர்வையின்றிக் கிடைத்த புண்ணிய வாகனங்களை விலைக்கு விற்றுப் பணத்தை மலையாகக் குவித்துள்ளனர். இந்தக் காரியம் முற்றிலும் தவறானது. இது ஒரு பெரும் திருட்டுச் செயலாகும். இதனால் அந்தப் புத்தகுருமார்கள் சொர்க்க வாழ்வு வாழ்வதாக செய்திப் பத்திரிகைகளில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.

சொர்க்க வாழ்வு வாழ்கிறார்களோ இல்லையோ அது அந்தப் புத்தகுருமார்களைப் பொறுத்த விடயம். எனக்கென்றால் அது ஐந்து சதத்துக்கும் பெறுமதியில்லாத விடயம். நான் இது சம்பந்தமாக அக்கறைப்படுவதற்குக் காரணம் பொது மக்களின் பணம் இவ்வாறு நாசமாக்கப்படுவதால்தான்.

தீர்வையில்லாத வாகன இறக்குமதிக்கான சலுகை கிடைத்த நாளிலிருந்து இன்றுவரை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் பெற்ற தீர்வையில்லாத வாகனங்களை விற்றுக் கோடிக்கணக்கான பொதுமக்களின் பணத்தை அடித்துச் சாப்பிட்டுவிட்டார்கள். அது மட்டுமன்றி, குருமார்களின் திருட்டு வியாபாரம் பற்றிய கதை இந்நாட்களில் செய்திப் பத்திரிகைகளில் தேங்காய் போன்ற பெரிய எழுத்துகளில் பிரசுரமாகிறது. எல்லாரும் இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். ஆயினும் இன்னும் சில நாட்கள் போனால் இந்தக் கதை மணலில் பெய்த மழைபோல் மறைந்துவிடும். குருமார்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறக்கூடிய ஒரு விடயம் உண்டு. எல்லாம் ஏழு நாட்களுக்குள் மறந்துவிடும் என்ற கூற்றே அது. புத்தர் பெருமான் கூறிய கூற்று பொய்யான குற்றச்சாட்டுகள் பற்றியதாகும். இந்தச் சக்கரவர்த்தி வியாபாரம் பற்றிய குற்றச்சாட்டு உண்மையான குற்றச்சாட்டு ஆகும். ஆயினும் இதுபற்றி எழுகின்ற இந்தக் குற்றச்சாட்டுக் கோஷமும் சிறிது காலத்துக்குத்தான். இதற்குப் பின் திருடர்கள் சுகமாக நித்திரை கொள்வார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் இதுபற்றிக் கூறியிருந்தார். அதாவது, சிங்கள மக்களின் ஞாபகம் சிறிது காலத்துக்கே என்று. உயர்ந்த உள்ளங்களின் தீர்மானங்கள் சமாந்தரமானவை எனப்படும் ஒரு ஆங்கிலக் கூற்று எனக்கு ஞாபகம் வருகிறது.

"திருடர்களில் திருடர் யானைத் திருடர்" என்பது ஒரு பழமொழி. தெரண தொலைக்காட்சியில் உரையாடல் நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான குருமார்கள் தீர்வையின்றி பெற்ற வாகனங்களை விற்று பெரும் பணத்தை மடியில் கட்டிக் கொண்ட குப்பைக் கதைபற்றியும் உரையாடப்பட்டது. இந்த உரையாடலில் கலந்து கொண்ட ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஒரு புதுமையான கேவலமான ஆலோசனை ஒன்றைக் கூறினார். அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வையின்றிப் பெற்ற விலைமதிப்பற்ற கார்களை விற்று பணத்தைக் குவிப்பதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற யோசனையே அது. திருடர்களிலும் திருடர் யானைத் திருடன் என்ற பழமொழிதான் எனக்கு அந்த நேரம் நினைவுக்கு வந்தது.

ஜெயராஜின் பறியிலிருந்து பூனை வெளியே பாய்ந்துவிட்டது. ஜாதிக ஹெல உறுமய இதுவரை மூடி வைத்த விடயத்தை ஜெயராஜ் இரக்கமில்லாமல் வெளியே விட்டுவிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களான குருமார்கள் வாகனங்களை விற்று பணத்தை மூட்டை கட்டிகொண்டது உண்மைதான் என்று ஜெயராஜ் கூறியிருந்தார். இந்த உண்மையை வெளிப்படுத்திய ஜெயராஜ் அதற்காக உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று யோசனை கூறினாரா? அப்படியில்லை. அதற்குப் பதிலாக அவர் வேறு யோசனை கூறினார். அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்வையில்லாத வாகனத்தை விற்று கோடிக்கணக்கில் பணத்தை மூட்டை கட்டுவதை சட்ட பூர்வமானது என சட்டரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

இந்த யோசனையின் ஒரே ஒரு நோக்கம் இதுதான். பாராளுமன்ற உறுப்பினர்களான புத்தகுருமார் மட்டுமன்றி, ஏனைய உறுப்பினர்களும் அமைச்சர்களும் அரச உயர்மட்ட உத்தியோகத்தர்களும் வைத்தியர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் தமக்குக் கிடைக்கின்ற இந்த தீர்வையற்ற வாகனங்களை விற்றுப் பணம் தேடுகின்றனர். அவர்களுக்குக் கிடைத்த நல்ல பொக்கிஷம் இது. இதனால் இதை சட்டபூர்வமாக்க வேண்டும். அவ்வாறு செய்து அவர்களுக்கு இந்த அழுக்குச் சூறையாடலை சுதந்திரமாக தடையின்றிச் செய்வதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இவ்வாறான குற்றவாளிகளுக்கு எதிர்காலத்திலும் பயன்படக் கூடிய வகையில் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள்.

ஹெல உறுமய பாராளுமன்ற குருமார்கள் மட்டும் இந்த அழுக்கு உணவைச் சாப்பிட்டு அஜீரணத்துக்கு உள்ளாகி வருந்துவதற்கு இடமளித்து மௌனமாக இருந்து விடலாம். ஆனால், ஏனைய அனைவரும் இதைச் சாப்பிடுகிறார்களே, அவர்களும் எமது ஆட்கள் தானே. இவர்கள் இல்லாமல் நாம் நிலைக்க முடியாது. இவர்கள் இல்லாமல் எமக்கு வயிற்றை வளர்த்துக் கொள்வதற்கான அதிகாரம் எங்கிருந்து கிடைக்கும்? இந்த யோசனையின் அடிப்படையான குறிக்கோள் இது தான். இங்கிலாந்து போன்ற செல்வந்த ஜனநாயகம் இருக்கும் நாடொன்றின் அமைச்சர் ஒருவர் இவ்வாறு பெரும் திருட்டை சட்ட பூர்வமாக்கும்படி பேசினார் என்றால், இத்தனைக்கும் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்.

ஆனால், அவ்வாறு செல்வந்த ஜனநாயகம் இல்லாத, செல்வந்த பிரபுக்கள் இல்லாத இந்த நாட்டில் இவ்வாறு திருட்டைச் செய்துகொண்டு அதாவது, புத்திசாலித்தனமாக செய்து கொண்டு சுகமாக வாழ முடியும். அனைத்துத் திருடர்களும் இவ்வாறு பிரார்த்தனை செய்யலாம். அதாவது புண்ணியத்துக்கு மாறான இந்தப் பொன்னாசை மீண்டும் பிறப்பதற்கான அதிர்ஷ்டத்தை தரட்டும் என்று வேண்டிக்கொள்ளலாம்.இந்தப் பொன்னாசையை துறவிகளின் சுவர்க்கம் என்று கூற முடியாதா?

ஜெயராஜ் ஒரு கேலிக்காரர். இவர் இவ்வாறான பொது அறிவிப்புகள் செய்வதற்கு இடமளிக்கக்கூடாது என்ற கருத்துப்பட ஜனாதிபதி ராஜபக்ஷ அறிவித்தது பற்றி அண்மையில் செய்திப்பத்திரிகையொன்று கூறியிருந்தது எனக்கு ஞாபகம்.

உண்மையில் ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந்தால், மக்களை மதிக்கும் இயல்பு அவருக்கு இருப்பதில் சந்தேகம் இல்லை. ஜெயராஜ் இவ்வாறு தவறாக பேசிவருவதையே இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அவர்கள் அனைவரும் களவு, ஊழல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களாகவே உள்ளனர். அகதி மக்களுக்காக கொடுக்கப்பட்ட கூரைத்தகடுகளை விற்றார்கள், சுனாமி நிவாரண நிதி உதவிகளை அடித்துச் சாப்பிட்டார்கள். மாவிலாறு விவசாயிகளுக்குக் கிடைத்த நிதி உதவி மற்றும் நிவாரண உதவிகளை தின்றார்கள். இவ்வாறே பல்வேறு வெளிநாட்டு உதவிகளை விழுங்கினார்கள். மரங்கள், செடிகளைக் கூட வெட்டி விற்றார்கள். இவ்வாறு பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

சுனாமி அழிவு நிவாரணத்துக்காகக் கிடைத்த பணம் "ஹெல்பிங் அம்பாந்தோட்டை" என்ற பெயரிலான வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளப்பப்பட்டன. இது சம்பந்தமாக முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை. வட, கிழக்கு மக்களைக் கொண்டு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்வதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா பூஜையாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு கிளப்பப்பட்டுள்ளது. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி விசாரணை நடத்துவதற்கான விசேட பாராளுமன்ற குழுவை அமைக்கும்படி கோரினார்கள். ஆனால், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஊமைகளாகி விட்டனர். இதன் பொருள் என்னவென்றால், அதிகாரத்திலிருப்பவர்கள் அவர்களுக்கு வேண்டிய அனைத்து தீவிர குற்றச்செயல்களையோ, அழுக்குவேலைகளையோ செய்துவிட்டுத் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்பதே.

இவ்வாறான நிலைமை இருப்பதால்தான் ஜாதிகஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களான வஹன்சேக்களின் மேற்படி முறையற்ற செயல்களையிட்டு யாரும் அக்கறைப்படவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை. உண்மை நிலை என்னவென்றால், இந்த நாட்டின் ஆட்சி அதிகாரம் பெற்ற அனைத்துத் தரப்பினரும் வழிப்பறித் திருடர்கள் போலச் செயற்படுகின்றனர் என்பதே.

வடக்கு, கிழக்கு யுத்தம் பற்றி ஆராய்ந்து பார்ப்போம். இந்த யுத்தம் இரண்டு நோக்கங்களை முன்வைத்துச் செயல்படுகிறது. ஒன்று நாம் நாட்டை மீட்டெடுக்கிறோம் என்ற மாயை மூலம் மக்களின் கண்களைக் குருடாக்கிவிட்டு ஏனைய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியில் தொடர்ந்து இருப்பது. இரண்டாவது ஆயுதக் கொள்வனவு வியாபாரம் மற்றும் செயற்பாடுகள் மூலம் கோடிக்கணக்காக சம்பாதித்தல் ஆகிய நோக்கங்களாகும்.

யுத்தத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவுகள் ஏற்பட்ட போதும் இந்தத் திருடர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களான குருமார்கள் வாகன வியாபாரம் செய்த குற்றம் சரியாகிவிடும் என்று நான் கூறுவதாக எனது அறிக்கையைப் பிழையாகக் கருதவேண்டாம். நான் கூறுவது இதைமட்டும்தான்; ஜாதிகஹெல உறுமய போலவே ஏனைய கட்சியில் இருப்பவர்களும் திருடர்கள் தான். இவர்களில் ஒருவரையாவது கௌரவமான பிரஜை என்று கருத முடியாது. மூன்றாம் மண்டல நாடுகளிலுள்ள அனைத்து ஆளும் கோஷ்டியினரும் கீழ்த்தரமான திருடர்கள் என்பது உலகம் அறிந்த விடயம்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்தப் பேச்சின் அர்த்தம் இதுதான்; அரசு சார்பில் மக்களை ஏமாற்றுவதற்காக மூளையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும். இங்கு மூளையுள்ள என்பதன் அர்த்தம் கபடமான ஏமாற்றுக்கார குணம் தாராளமாக உடைய நபர் வேண்டும் என்பதையே குறிக்கின்றது.

ஜனாதிபதி வேண்டியிருப்பது வாய்ப் பேச்சால் பிழை விடாத அரசியல் கரண விளையாட்டுகளில் சூரராக உள்ள நபர் ஒருவரையே. பச்சைப் பொய்க்காரர் ஒருவரையே, கோயபல்ஸ் போன்ற பொய்காரச் சூரர் ஒருவரையே.

பூசணித் திருடனைத் தோளில் தெரியும் என்பது பழமொழி. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் சம்பந்தப்பட்ட பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் இங்கு வந்து சென்றார். அவர் ஜனாதிபதியின் வாயிற் கதவுக்கு வந்து இவ்வாறு ஒப்பாரி பாடினார்.

நிவாரண சேவையாளர்கள் காலடி எடுத்து வைப்பதற்குக் கூட இந்த நாடு ஏற்றதல்ல எனவும் இங்கு மனித உரிமைகள் முற்று முழுதாக மீறப்படுகிறது எனவும் கருணா குழுவினரை நிராயுதமாக்கவேண்டும் எனவும் அவர் கூறிவிட்டுச் சென்றார். இதைக் கேட்டவுடன் பூசணித்திருடன் தோளைத் தடவி பார்த்துக்கொண்டிருப்பான்.

இவ்வாறு குற்றவாளிகளான அரச நிர்வாகக் கோஷ்டியின் முக்கிய நபர்கள் மேற்படி குற்றச்சாட்டுகளுக்கெதிராகவும் ஹோம்ஸுக்கு எதிராகவும் கடுமையாகத் திட்டினர்.

இவர்களில் பெரும் குரல் கிளப்பியவர்கள் குணதாச அமரசேகரவும் ரத்னசிறி விக்கிரமநாயக்கவுமே.

ஹோம்ஸ் இந்த நிந்தனைகளைக் கேட்டு அழுதுவிட்டிருப்பார். ஹோம்ஸ் இவ்வாறு கூறியவைகளைப் பொய்யாக்க முடியுமா? பட்டினிக்கு எதிரான அமைப்பின் நிவாரண சேவையாளர்கள் கொல்லப்பட்டது பொய்யா? திருகோணமலையில் ஐந்து பாடசாலை மாணவர்களைக் கொன்று போட்டது பொய்யா? செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களைக் கொன்று போட்டது பொய்யா? பெருந்தொகையானோர் கடத்தப்பட்டதும் கப்பம் வாங்கியதும் கப்பம் கொடுக்காத சிலரைக் கொலை செய்ததும் பொய்களா?

ஆறு இலட்சம் மக்களைப் பிரதேசங்களிலிருந்து விரட்டி அகதிகளாக்கியிருப்பது பொய்யா? யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான இளையவர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் சேற்றுக் கூடாரங்களில் மழையிலும் வெய்யிலிலும் காற்றிலும் நீரின்றி, உணவின்றி, மலசலகூட வசதியின்றி நரகத்தில் உழலுவது பொய்யா? பொய்யில்லை என்றால், இவை மனிதவுரிமை மீறல்கள் இன்றி வேறென்ன?

கருணா அரசிடமிருந்து கப்பம் வாங்கிக்கொண்டு தமிழர்களின் விடுதலைக்கு குழிபறிப்பதும் தன் இனத்திற்குத் தானே துரோகம் செய்வதும் பொய்யா? அவர் அரச பாதுகாப்புத் துறையின் ஆதரவில் செயற்படுவது பொய்யா?

இவை அனைத்துக்கும் பொறுப்புக் கூறவேண்டியது அரசாங்கமே என, வெளிநாட்டவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஓலமிடும் அமரசேகரவுக்கும் ரத்னசிறிக்கும் கொடுக்கும் நல்ல பதில் இதுதான்.

இந்த கொடுமையான குற்றங்களை மறைக்கும் அமரசேகர ஒரு தேசத்துரோகி. அவற்றை வெளிப்படுத்திய ஜோன் ஹோம்ஸ் இந்த நாட்டின் உண்..

Please Click here to login / register to post your comments.