இரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம்

ஆக்கம்: க.வே பாலகுமாரன்

தமிழ் மக்களுடைய அரசியல் ஒழுங்கிலே இப்பொழுது வாய்ப்பாட்டு மாற்றமொன்று நிகழ்கின்றது என்பதும் அதற்கு மகிந்தருடைய ஆட்சியே காரணமென்பதும் மிகத் தெளிவு. இணைக்கப்பட்ட மகிந்த சமாசம் (சிங்களத்தில் சமாகம) என்றே அவரது முச்சோதரர் குடும்ப ஆட்சி அழைக்கப்படுகின்றது.

மிகுந்த மயக்கத்தையும் குழப்பத்தையும் பிறருக்குத் தரத்தக்க வகையில் மகிந்த சகோதரர் ஆட்சி அரங்கேறுகின்றது. எவ்வித தயக்கமுமின்றி சாம,பேத,தான,தண்டங்களை முக்கூட்டு கையாள்கின்றது. எத்தகைய முடிவுகளையும் எதுவித கூச்ச நாச்சமுமின்றி எடுக்கின்றது.

எத்தகைய கொலை, ஆட்கடத்தல் போன்ற நாசகாரச் செயல்களைச் செய்யவும் இவர்கள் ஆயத்தமாகவுள்ளார்கள.; எவரையும் பற்றிக் கவலைப்படாமலும் எத்த்தகைய தார்மீக பொறுப்புமற்றும் அரசியல் அதிகாரத்தின் உச்ச உருசியை இவர்கள் அனுபவிக்க்கின்றார்கள்.

சிறிலங்காவை இதுவரை ஆண்ட எந்த குடும்ப ஆட்சியையும் விட மிகக் கூடுதலான குடும்ப உறவுகளைப் பல்வேறு பதவிகளிலும் அமர்த்திக்கொண்டிருக்கும் பெருமையும் இவர்களுக்கே போய்ச்சேர்கின்றது.

அமைச்சுச் செயலாளர், ஆலோசகர் என இராசபக்ச உறவுகளால் நிரம்பிவருகின்றது சிங்கள அதிகாரக்கட்டமைப்பு.

    உண்மையிலேயே இம் மகிநிந்த்தர் யார்? அவரொரு அரசியியல் கோமாளியா? அல்லது சாணக்கியினா? மூன்றாம் தர ஆணவம் பிடித்த பதவி வெறியனா? மதியூகியா? அவரது உள்ளும் புறமும் அல்லது உள்ளுறை மனிதன் யார்? அவன் எப்ப்படிப்பட்டவன்?

    இதற்கான முழுமையான விடையை உடனடியாக எமமால் காணமுடியா விட்டாலும் பேருண்மையொன்று இப்பொழுது எமக்கு தெளிவிவாகின்றது.

நாள் தோறும் மிகையொலி தாரை விமானங்கள் குண்டுவீசி மக்களை அழித்தாலும் எத்தனை இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து துயர்ப்பட்டாலும் எத்தகைய ஈவு இரக்கமுமின்றி தமது ஆட்சியைத் தக்கவைக்கவும் முடிவெடுத்துள்ளார்கள்.

எத்தகைய கண்டனங்கள் எங்கிருந்து வந்தாலும் அவற்றினைப் பூவெனப் புறம்தள்ளிவிட்டு அவர்கள் காதிலே பூச்சுற்ற எத்தகைய வெட்கமுமின்றி மகிந்தர் துணிகின்றார்.

எனவே இத்தகைய பல்வேறுபட்ட குழப்ப நிலையைத் தோற்றுவித்தமையால் மகிந்தருடைய இலக்கு எதுவென பிறர் அறியக்குழம்பும் நிலையில் அவரால் போப்பாண்டவரையும் சந்திக்க முடிவாகிறது.

முன்னொருகால தொழிற்சங்க ஆதரவாளன் என்கிற கோதாவில் சருவதேச தொழிற்றாபனத்தின் (ILO) வருடாந்த மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்புக் கிடைக்கிறது. எனவேதான் இக் கேள்வி எழுகின்றது.

உண்மையிலேயே இம் மகிந்தர் யார்? அவரொரு அரசியல் கோமாளியா? அல்லது சாணக்கியனா? மூன்றாம் தர ஆணவம் பிடித்த பதவி வெறியனா? மதியூகியா? அவரது உள்ளும் புறமும் அல்லது உள்ளுறை மனிதன் யார்? அவன் எப்படிப்பட்டவன்? இதற்கான முழுமையான விடையை உடனடியாக எம்மால் காணமுடியாவிட்டாலும் பேருண்மை யொன்று இப்பொழுது எமக்குத் தெளிவாகின்றது.

சிங்களத்தின் இற்றைவரையான வரலாற்ற்றின், அதன் கற்ப்பிதங்க்களின், ஐதீகங்களின்;, கற்பனையின் ஒரு விளைபொருளே மகிந்த்தர். சிங்கள தருக்கத்த்தின் வடிவுருவும் அவரே. சிங்க்கள பௌத்த பேரினவாதத்திற்கப்பால் தமிழர் மீதான காழ்ப்பும் வெறுப்பும் தமது தனிமை தொடர்ப்பான அச்சமும் வெளிநாட்ட்டவர் மீதான வெறுப்புமென இவை கலந்த உளவியல் பரிமாணமொன்றின் படிவளர்ச்ச்சியின் தோற்றமும் இவரே.

எனவே அவர் ஒரு விசித்திரமான விபரீதமான மனிதத் தன்மையற்ற, வக்கிரம் நிரம்பிய ஒரு ஆட்சியொழுங்கை நடத்துகின்றார். ஆயினும் இது குறித்து நாம் அதிசயப்படவோ, அச்சப்படவோ எதுவுமில்லை. கூர்ந்து நோக்கின் காலம் காலமாக சிங்களத்தை ஆண்டோர் யாவருமே சிங்கள பௌத்த பேரினவாதப் போக்கோடு தத்தமக்கான தனிவியல்புகளையும் கலந்து ஆட்சி செய்தனர்.

மகிந்தரின் போக்கோ இங்கேதான் வேறுபடுகின்றது. அவரது தனித்தன்மையென்பது இதுவரை ஆண்டோரின் அரசியல் உத்திகளை, தந்திரங்களை இராணுவ மேலாதிக்க முறைமைகளை இன்னொரு நிலைக்கு இட்டுச்செல்வதாக அமைகின்றது.

பண்டா தொட்டு சந்திரிக்கா வரை ஆட்சி புரிந்தவரின் இயல்புகளை அளவான விகிதத்தில் கலந்துருவான அரசியல் கலவையாக மகிந்தர் தோற்றமளிக்கின்றார்.

இத்தகையதொரு எதிரியைப் பல முனைகளிலும் சந்திக்கவேண்டியதும் அதனை முறியடித்துத் தமது அறிவின் ஆற்றலை வெளிப்படுத்தவேண்டிய அவசியமும் உள்ள நிலையிலே தமிழ் மக்கள் இன்றிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக அவர்கள் நிறைவேற்றவேண்டிய இன்னொரு கடப்பாடிது.

தனது குழப்பம் மிகுந்த செயற்பாட்டால் சருவதேசம் குழப்பமும் தயக்கமும் கொண்டு தடுமாறும்போது கிடைக்கும் கால அவகாசத்தில் தனது இராணுவ இலக்குகளை அடையமுற்படும் மகிந்தர் அதேவேளையில் இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பதாகக் கூறி அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூட்டிவருகின்றார்.

தன் மீதான கண்டனங்கள் அதிகரிக்கும் போது (எல்லாக் கட்சிகளும் பங்குபற்றாத) அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் தீர்வு வரைவு முன்நிலையில் வைக்கப்படும். கால எல்லையை மிகவும் சுருக்கி அறிக்கைவிட்டு ஏய்க்கும் இப்பாங்கும் புதியதல்ல. இப்போது APRC அதாவது அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் முன்பு APC அவ்வளவுதான்.

1983 ஆடி, ஆவணியின் பின்னான இந்தியத் தலையீட்டை திசை திருப்ப ஜே.ஆர் கண்டுபிடித்த தூக்க மருந்திது. பின் பிறேமா, சந்திரிக்கா எல்லோரும் ஏறிய குதிரைதானிது.

இங்குள்ள சுவையான விடயமென்னவென்றால் வெள்ளைப் புறாவாக சிறகடித்த சந்திரிக்கா நாடாளுமன்றக் கட்சிகள் முன்வைத்த ஓரளவு பெரும்போக்கான தீர்வுப்பொதி - பின் அப்பொதி இரகசியமாகச் செய்தியேடுகளுக்குக் கசியவிடப்பட்ட விதம் - கிளம்பிய எதிர்ப்பைக் காரணம் காட்டி அப்பொதியை ஒட்டவெட்டி நறுக்கித் தூக்கி வீசிய விதம் -அம்மையாரிடமிருந்து மகிந்த மாமா பெற்ற முதிசம். திஸ்ஸவிதாரணவின் வல்லுநர்கள் வரை அது கசியவிடப்பட்டமை - மகிந்த சீற்றம் - குப்பைத் தொட்டிக்குள் தீர்வு எல்லாம் பழைய கதைதான். வாய்கள் வேறு வார்த்தைகள் ஒன்nறென சென்ற ஏட்டி;டில் குறித்தோம.; இங்கு கதைக்கருவொன்று காட்சிகள் வேறு என்றாகின்றது.

அதுபோலவே கட்சிகளை உடைப்பது அதிலிருந்து ஆட்களைத் தூண்டில்போட்டு இழுப்பது அதுவும் புதிதல்ல. சிறிமாவைத் தனிமைப்படுத்திக் குடியுரிமையைப் பறித்து அனுராவைப் பக்கமிழுத்த ஜே.ஆரின் நரிப்புத்தி உலகறிந்தது.

ஆனால் பிரதி அமைச்சர் பதவி கிடைத்தும் திருப்தியற்ற நிலையில் வெளியேறி மீண்டும் ரணில் என்கிற மரத்திற்குத் தாவிய எட்வெட் குணசேகரா எனும் மந்திபோல் ஏனையவையும் ஏனையோரையும் கூட்டிக்கொண்டு தாவாமல் தடுப்பதே மகிந்தரின் முழுநேர வேலை.

அதே நேரத்தில் மிகக் கடுமையான குற்றப்பத்திரிகை தன்மீது வாசித்த மங்களவை மீண்டும் தன் பக்கமிழுக்கப் பலத்த முயற்சிகள் மகிந்தர் எடுப்பதே இப்போது கொழும்பில் பரபரப்புச் செய்தி. சூரியாராய்ச்சியாரைச் சிறைக்குள் அடைத்துவிட்டு மங்களத்தைத் தனது கூட்டுக்குள் அழைக்கும் மகிந்தரின் புத்தி ஜே.ஆரின் குள்ள நரித்தனத்தின் சிறப்பான தொடர்ச்சியல்லவா?

உள்நாட்டில் ஆட்சியைத் தக்கவைக்க எத்தனையோ திருகுதாளங்கள் செய்யும் மகிந்தரின் முக்கூட்டு ஆட்சிக்கு இன்று இரு பாரிய நெருக்கடிகள் முன்னுள்ளன. கீழே விழாமல் பந்துகளை மாற்றி மாற்றிக் கையேந்துவது போல் மகிந்தர் வித்தை காட்டினாலும் கருஜெயசூரிய குழுவினருக்கு ஆசை காட்டித் தாலாட்டுப் பாடி தூங்கவைத்தாலும் அவரை அலைக்கழிப்பது, அடுத்து புலிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்கிற புதிரும் வேகமாக அதிகரிக்கும் மனித உரிமை மீறல் கண்டனங்களும்தான்.

அடுத்துப் புலிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது தரும் அதிர்ச்சியை விட அது பற்றிய எதிர்வு கூறல்களே அவருக்குப் பெரும் தலையிடியாகவுள்ளது.

எனவே இடைவிடாத இராணுவ நடவடிக்கைகள், இடையறாத வான் தாக்குதல்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என பேயாட்சி புரியும் அவர் சருவதேச ஆதரவைத் தக்கவைக்க எடுக்கும் முயற்சிகளும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதை இன்னொரு நிலைக்கு இட்டுச்செல்வது தெளிவு.

சிறிமாவோ காலத்தில் சீன, பாக் உறவுகள் கூடுதல் வளர்ச்சி பெற்றதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடான சீனாவின் நல்லுறவும், ஜே.ஆர் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட அமெரிக்க உறவும், பொதுவாக யப்பானுடனான மிக நீண்டகால நல்லுறவும் அவருக்குக் கைகொடுக்கின்றன.

எனினும் சீனாவுடனான உறவு அவரது சருவதேச அரசியலில் ஒரு தடுப்புக் காரணியாக அமைவதும் 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சிக்குப் பின்னர் சிங்கள இராணுவத்தை நவீன இராணுவமாக்க சீனா வழங்க ஆரம்பித்த உதவியும் (அப்போது பிரித்தானிய எஸ்.எல்.ஆர் வகை சுடுகலன்களை மாற்றி இராணுவத்திற்கு ரி56 இலகு வகைத் துப்பாக்கிகளைச் சீனாவே வழங்கியது) இன்று மேலும் அதிகரித்த அளவில் இருப்பதும் தெளிவு.

அதேவேளை அமெரிக்காவை திருப்திசெய்ய இதுவரை எதனைச் செய்ய இலங்கையை ஆண்டவர்கள் தயங்கினாரோ அதனை அவர் செய்தமையும் கவனிக்கத்தக்கது. ACAS எனப்படும் அமைதிக்கால அமெரிக்கச் செயற்பாடுகளுக்கு இலங்கையைத் தளமாக (துறைமுகங்கள் பயன்படுத்தல் போன்றவை உட்பட) பயன்படுத்த உதவும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டமை) இந்தியாவைச் சமாளிக்க சிறிலங்காவில் பொற்றோலிய விற்பனையில் கணிசமான பங்கும் மன்னார் கடலில் எண்ணெய் படிவ ஆய்விற்கு அனுமதியையும், சம்பூர் அனல் மின்நிலையம் பற்றிய உடன்பாடுமென அவர் செயற்படுத்துகின்றார்.

இப்போது அவர் எதிர்நோக்கும் சிக்கல் மனித உரிமை மீறல் பற்றிய அதிகரித்த கண்டனங்களே. அதிலும் அண்மையில் வெளியான இரு கண்டனங்கள் அவரை நெருக்கடிக்குள் ஓரளவிற்காவது தள்ளியுள்ளன.

எனவே இவை பற்றிய ஏதாவது திசைதிருப்பல்கள், ஏமாற்றுக்கள் செய்யவேண்டிய நிலையிலுள்ள அவர் என்ன செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்தே அவரது எதிர்கால இருப்புத் தீர்மானிக்கப்படக்கூடும்.

மிக அண்மையில் போப்பாண்டவர் தனது வருடாந்த ஈஸ்டர் செய்தியில் சிறிலங்கா பற்றி விசேடமாகக் குறிப்பிடுகையில் “பல்லாயிரம் மக்கள் முகம் கொடுக்கும் வன்முறைகள் பற்றி, கொள்ளைநோய் போல் பரவும் பசி, பட்டினி பற்றி, பிணிகள் பற்றி, ஆட்கடத்தல்கள் பற்றி, பயங்கரவாதம் பற்றியெல்லாம் இந்த வேளையில் சிந்தித்துப்பார்க்கின்றேன். மனித உயிர்களைச் துச்சமாக எண்ணல், மனித உரிமைகளை மீறல், மக்களைத் தம் சுயலாபத்திற்குப் பயன்படுத்தல் போன்றவற்றையெல்லாம் மதத்தின் பெயரால் நியாயப்ப்படுத்தும் போக்கினையும் எண்ணிப் பார்க்கின்றேன். பெரும் குருதிக்களரியை ஏற்படுத்தியிருக்கும் இம் முரண்பாட்டிற்கு இணக்கமான பேச்சு;சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வினைக் காண முடியும்|| கடுமையான தொணியில் திருத்தந்தை கூறியிருப்பதன் தாக்கத்தினை எவரும் உணரமுடியும்.

அடுத்த அதிர்ச்சியும் உடனே காத்திருந்தது. எந்தக் கண்காணிப்புக் குழுவை அமைக்க மகிந்தர் தயங்குகிறாரோ அந்தச் சருவதேச கண்காணிப்புக் குழுவை அமைக்க அமெரிக்கா ஆதரவு என வெளியான செய்தியும் அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் வெளிவிவகாரக் குழுத்தலைவரான ரொம் லன்ரொசின் கடுமையான கண்டனமும் அடுத்தடுத்து வெளியாகின.

இவற்றினையடுத்து மகிந்தர் அடித்த பல்டியே மீண்டும் அமைதி முயற்சிக்கு மகிந்தர் பச்சைக்கொடி, விரைவில் தீர்வுப்பொதி என்கிற செய்திகளும் அதேவேளை முக்கூட்டுத் தலையரில் விதைத்த தலையராகக் கருதப்படும் கோத்தபாய ஏபி செய்தியாளருக்கு வருமாறு தெரிவிக்கிறார் “இப்பொழுது போர்நிறுத்த உடன்பாடு என்றொன்றுமில்லை. அதில் பொருளுமில்லை. சருவதேசத்தைத் திருப்தி செய்வதற்காக இன்னமும் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை|| ஏபி செய்தியாளரே சொல்கிறார். இதுவொரு புதிய திருப்பம்.

இதுவரை புலிகள் தாக்குதல் தொடுத்தமையாலே பதில் இராணுவ நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள நேரிட்டது. அப்படியிருந்தும் போர்நிறுத்தத்தை பெரிதும் மதிக்கின்றோம் இவ்வாறு அப்போது அரசுமட்டம் கூறிவந்தது.

சருவதேசத்தினை ஒரு பொருட்டாகவே எடுக்காது எடுத்தெறிந்து பேசி கூறப்பட்ட இப்பதில் வாய் தவறி வந்ததா? வாய்க் கொழுப்பின் வடிவமா? தீவின் இனவெறியாளர்க்கான தீனியா?

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும். அம்மையார் காலத்தில் அண்டப் புளுகு ஆகாசப் புளுகையெல்லாம் எம் மக்கள் கேட்டவர்கள். பின் அம்மையார் அறுந்த பட்டம் போல் அலைந்து வீழ்ந்ததையும் பார்த்தவர்கள். சந்திரிக்காவின் இருண்ட பக்கங்களை, கேவல நடத்தையை ஏமாற்றுத்தனத்தையெல்லாம் வரிக்கு வரி ஆதாரபூர்வமாக அண்மையில் ராவய விக்டர் ஐவன் “பொய்மையின் இராணி|| (வுர்நு ஞருநுநுN ழுகு னுநுஊநுஐவு) என்கிற பெயரில் வெளியிட்டார். மிகப் பரபரப்பான இந் நூல் பற்றி ஐலன்ட்(25.11.2006) தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது. இந்நூலை மகிந்தர் இவ்வாறு பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு இரவும் நித்திரைக்குப் போகும்வரை வரிக்கு வரி வாசிக்கவேண்டும். அப்போதுதான் இருவிடயங்கள் அவரது கவனத்தில் உறைக்கும்.

ஒன்று தன்னைத்தானே தனிமைப்படுத்தித் தனக்குச் சாபத்தைத் தானே தேடிய அவர் எவ்வளவு தூரம் பிறரால் அவதானிக்கப்பட்டார் என்பது. இரண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவியென்பது இரவல் வாங்கப்பட்ட ஒரு ஆடையே என்பது.

Please Click here to login / register to post your comments.