ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்வு பிரேரணை குறித்த ஆய்வு

இலங்கையிலுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது பிரேரணைகளை அனைத்து கட்சியின் மாநாட்டுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்மொழிவில் மாவட்டங்கள் அதிகாரப் பகிர்வின் அலகாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது தமிழர்களை பொறுத்தவரை ஏமாற்றமாகவே இருக்கும் என இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால் தென்னிலங்கையில் உள்ள கடும்போக்கு கட்சிகள் இது குறித்து மகிழ்ச்சியடையக் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.

இந்த பிரேரணை ஆளும் கட்சியிடம் இருந்து வருவதனால் மற்ற கட்சிகளின் முன்மொழிவை விட வலுவானதாகப் பார்க்கப்படும் எனவும் அவர் தெரிவிக்கிறார். தென்னிலங்கையில் உள்ள கடும்போக்கு கட்சிகள் இதை ஆதரிக்கக் கூடும் என்கிற நிலையில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பேராசிரியர் பொன்கலன் கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள ஆளும் கட்சியானது இது போன்ற அரசியல் திட்டத்துடன் இராணுவத் திட்டம் ஒன்றையும் முன்னெடுக்கும் பட்சத்தில், அது வெற்றி பெறுமானால் இதற்கு வடக்கிலிருந்து பாரிய சவால் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Please Click here to login / register to post your comments.