மகிந்த அரசின் எதிர்காலமும் சிங்கள இராணுவமும்

ஆக்கம்: புரட்சி (தாயகம்)
காலத்திற்கு காலம் சிறிலங்கா அரசின் தலைவர்களும் அவர்களின் இராணுவத் தளபதிகளும் புலிகளைப் போரில் வென்று வருவதாகவும் விரைவில் அவர்களை முழுமையாகத் தோற்கடிக்கப்போவதாகவும் தெரிவித்துவருவது வழக்கமாகும்.

பௌத்த பேரினவாதிகள் மற்றும் இனவாத கடும்போக்காளர்கள் இவ்வாறான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களுக்கு எதிராக ஊர்வலம் நடத்துவதும் தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை முதற்பக்கத்தில் வெளியிடுவதும் நாம் எல்லோரும் அறிந்ததே.

எவ்வாறெனினும் சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள் எதிர்பார்;க்கும் பாரிய இராணுவ வெற்றிகள் எதனையும் துட்டகைமுனுவின் மைந்தர்கள் இதுவரை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டார்கள். இது சிங்கள பேரினவாதிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் சலிப்பையும் அளிக்கும் விடயமாகவே கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக இருந்துவருகின்ற அதேவேளை ஏமாற்றத்தையும் விரக்தியையும்தான் இவர்களுக்குத் தொடர்ந்து கைமுனுவின் மைந்தர்கள் பரிசாக அளிக்கப்போகின்றார்கள் என்பதுதான் இங்கு செய்தியாக இருக்கின்றது.

இற்றைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ~போரியற்கலை| என்ற கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய சீன இராணுவ மேதையான சன் சூ அவர்களின் கருத்துக்களின் படியும், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படைத்துறை மூலோபாய வல்லுனர்களான கார்ல் வொன் குளோஸ்விச் மற்றும் அன்ரோனி கென்றி யோமினி ஆகியோர்களின் கோட்பாடுகளின்படியும் ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. (இந்த இரண்டு இராணுவ மேதைகளும் மாவீரன் நெப்போலியன் காலத்தில் வாழந்தவர்கள். இவர்களின் கோட்பாடு தொடர்பாகவும் சீன இராணுவ மேதை சன் சூவின் போரியல் கலை மற்றும் ஏனைய போரியல் கோட்பாடுகள் தொடர்பாகவும் பின்னைய அத்தியாயங்களில் விரிவாக ஆராய்வோம்.)

~ஒரு போரின் அடிப்படை நோக்கமே எதிரியின் இராணுவ வளங்களையும் அவனது போரிடும் ஆற்றலையும் அழிப்பதாகும். போரின் வெற்றி என்பது இதனடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது|.

இராணுவ வளங்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது படையணிகள், வழங்கல் விநியோகங்கள், கவசப்படை, ஆட்டிலறிகள், பீரங்கிகள், மருத்துவ உதவிகள், கடற்படை, வான்பலம், கட்டளைப்பீடம், புலனாய்வு (அணு ஆயுதங்கள், விண்வெளி ஆதிக்கம்) போன்றனவற்றையாகும்.

இதனடிப்படையில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகள் சிலவற்றை நாம் இங்கு கவனிப்போம்.

சிறிலங்கா படைகளினால் மூன்று கட்டங்களாக 1995-96 ஆண்டுகாலப்பகுதியில் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக சூரியக்கதிர் 1,2,3 நடவடிக்கைகள் பெரும் எடுப்பில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. யாழ். குடாநாட்டினைக் கைப்பற்றி புலிகளின் முதுகெலும்பை முறித்துவிட்டாயிற்று என்று சிங்கள பேரினவாதிகளும் தென்னிலங்கை ஊடகங்களும் வெற்றி முழக்கங்களை எழுப்பினார்கள். ஜெனரல் அனுருத்த ரத்வத்த சப்புமல் குமரய்யாவின் நவீன அவதாரமாக மாறி தனது மருமகளாகிய சந்திரிகா அம்மையாரிடம் வெற்றிச்செய்தி ஓலையை கையளித்ததை சிங்கள அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதற்கு சரியாக மூன்று மாதங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ படைத்தளம் மீது தரை மற்றும் கடல் மார்க்கமாக பாரிய தாக்குதலை தொடுத்து முல்லைத்தீவு முழு நகரையும் மீளக் கைப்பற்றினார்கள். இத்தாக்குதலில் சிறிலங்கா முப்படைகளையும் சேர்ந்த 1,600க்கும் அதிகமான சிங்களப் படையினர் கொல்லப்பட்டார்கள்.

இதேபோன்று 13 ஆம் திகதி மே மாதம் 1997 ஆம் ஆண்டிலிருந்து 4ஆம் திகதி டிசம்பர் மாதம் 1998 ஆம் ஆண்டு வரை நீடித்த யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையை திறப்பதற்காக வவுனியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படுதோல்வியில் முடிவடைந்ததோடு விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை மூலம் ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை ஓட ஓட விரட்டி அடித்து இந்நடவடிக்கையின் மூலம் சிங்களப் படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்கள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். அது மாத்திரமல்லாது ஆனையிறவு பெருந்தளத்தையும் கைப்பற்றி யாழ். குடாநாட்டின் வாசல் வரையும் தமது படையணிகளை நகர்த்தினார்கள்.

இதன்பின் சிறிலங்கா இராணுவம் யாழ். குடாநாட்டில் இருந்து ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்கினி கீல (தீச்சுவாலை) என்ற இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. இந்த இராணுவ வலிந்த தாக்குதலை எதிர்த்து விடுதலைப் புலிகள் மூர்;க்கத்தனமான எதிர்தாக்குதலைத் தொடுத்து படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியதோடு சிறிலங்கா இராணுவத்தின் சண்டையிடும் படையணிகள் நீண்ட காலத்திற்கு தாக்குதல் நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபடமுடியாதளவிற்கு சிதைக்கப்பட்டன.

விடுதலைப் புலிகள் கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் போரியல் தொடர்பாக அவர்கள் பெற்ற அனுபவங்களும் இராணுவ வெற்றிகளும் அவர்களை ஒரு சிறந்த மரபு வழிப்படையாக மாற்றியது. அத்துடன் அவர்களின் மரபு வழி படை வலுவானது சிறிலங்கா அரச படைகளுக்கு நிகராக விளங்கியமையினால் ஒரு படைவலுச் சமநிலை இரண்டு தரப்பினருக்கும் இடையே தோன்றியது.

இவ் வலுச்சமநிலையே போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டமைக்கும் அதன்பின்னாக அமைதி முயற்சிகள் இடம்பெற்றமைக்கும் காரணமாக அமைந்தது. அத்துடன் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் சமதரப்பு என்று சர்வதேச சமூகத்தாலும் அனுசரணையாளர்களினாலும் கணிக்கப்படுவதற்கும் இவ்வலுச்சமநி;லையே பிரதானமான காரணியாகும்.

தற்போது போர் நி;றுத்த உடன்படிக்கை ஐந்து ஆண்டுகளைப் ப+ர்த்தி செய்துள்ள நிலையில், இக்காலப்பகுதியில் வலிந்த தாக்குதல்கள், ஒரு தரப்பி;ன் பிரதேசங்களை மற்றைய தரப்பு ஆக்கிரமித்தல் போன்ற பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தரப்பினர் மாத்திரமல்லாது நோர்வே அனுசரணையாளர்களே போர்நிறுத்த ஒப்பந்தம் கடதாசியில் மாத்திரமே இருக்கின்றது என்று கூறியுள்ள நிலையில் நாம் தற்போது உருவாகியிருக்கின்ற இப்புதிய சூழலில் வலுச்சமநிலை தொடர்பாக விரிவாக ஆராயவேண்டியுள்ளது.

இராணுவ வலுச்சமநிலை எனக் கூறும்பொழுது மூலோபாய ரீதியிலே ஒரு தரப்பின் படையணிகள் மற்றும் அதன் இராணுவ வளங்கள் எவ்வாறு எதிரிகளுக்கு எதிராக நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதே முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றது. அதாவது இராணுவ வலுச் சமநிலையின் மூலோபாய மையத்தை (ளுவசயவநபiஉ Piஎழவ) சரியாக அடையாளம் காண்பது, இராணுவ மேலாண்மையை எதிரிக்கு எதிராக பெறுவதற்கு மிகவும் அவசியமானது.

அதாவது மூலோபாய மையம் பற்றி அக்கறைப்படாது தவறாக தனது படையணிகளை எதிரிக்கு எதிராக ஒரு தரப்பு நிலைப்படுத்துமாயின் இராணுவ மேலான்மையை ஒருபோதுமே அத்தரப்பு பெறமுடியாது என்பதோடு இதற்காக பாரிய விலையினையையும் அத்தரப்பு சமர்க்களங்களிலே செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த வகையில் சிறிலங்கா இராணுவம் தனது படையணிகளை எவ்வாறு புலிகளுக்கு எதிராக நிலைப்படுத்தியிருக்கின்றது என்பதை இப்போது கவனிப்போம்.

சிறிலங்கா இராணுவத்தில் தற்போது பத்து டிவிசன் படையணிகள் இருக்கின்றன.

யாழ். குடாநாட்டிலே சிங்கள இராணுவத்தின் 51 ஆம், 52 ஆம், 54 ஆம் டிவிசன் படையணிகளும் மற்றும் 55இன் ஒருபகுதியும் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று மன்னாரில் 21 ஆவது டிவிசனும் வவுனியாவில் 56 ஆம் மற்றும் 57 ஆம் டிவிசன்களும் மணலாறு பகுதியில் 22 ஆவது டிவிசனின் ஒரு பகுதியும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா இராணுவத்தின் விசேட படைப்பிரிவான 53 ஆவது டிவிசன் வடபோர்முனை நோக்கியே தனது பெரும்பாலான வளங்களை திருப்பி வைத்துள்ளது.

இவ்வாறாக சிறிலங்கா படைத்துறையின் படைபலத்தில் 85 வீதத்திற்கும் அதிகமான படைபலமானது வடக்கே குவிக்கப்பட்டிருக்கின்றது.

சூரியக்கதிர், ஜெயசிக்குறு, அக்னிகீல போன்ற பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தமது நோக்கத்தை அடைய முடியாது தோற்றுப் போய்விட்டமைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும்போது நாம் பின்வரும் முடிவிற்கு வரலாம்.

சிறிலங்கா அரசின் தலைவர்களும் சிங்கள படைத்துறை அதிகாரிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான மூலோபாயத்தில்; படைகளை நிலைப்படுத்துதல் மற்றும் மூலோபாய மையம் தொடர்பாக பாரிய திருத்த முடியாத தவறிழைத்து விட்டார்கள் என்பதே அதுவாகும்.

யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் மரபுவழி படைத்துறை வளர்ச்சியை இல்லாமல் செய்துவிடலாம் என்றும் அவர்களது கட்டளைப் பீடங்களையும் வழங்கல் விநியோகங்களையும் பலவீனப்படுத்தலாம் என்றும் சிங்கள தலைவர்களும் படை அதிகாரிகளும் பலமாக நம்பியதாலேயே சூரியக்கதிர் நடவடிக்கைகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக விடுதலைப் புலிகள் தமது மரபு வழிப் படை வலுவை பாரியளவில் கட்டியெழுப்புவற்கு இந்நடவடிக்கையே காரணமாக அமைந்துவிட்டது.

யாழ். குடாநாட்டை தக்க வைப்பதற்காக சிறிலங்கா படையினரின் அண்ணளவாக நான்கு டிவிசன் படையணிகள் தற்போது இலங்கைத் தீவிலே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் போன்று விளங்குகின்ற தரைவழிப் பாதையில்லாத குடாநாட்டில் முடக்கப்பட்டுள்ளன. கடல் மற்றும் வான் வழி விநியோகங்கள் எப்போதும் இடையூறுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்து இருக்கின்ற நிலையில் யாழ். குடாநாட்டிலே பெரும் எண்ணிக்கையான சிறிலங்கா படையினர் நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தப்படுவதானது சிறிலங்கா அரசிற்கு பாரிய மூலோபாய, தந்திரோபாய ரீதியிலான நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய சமர்களை தமிழீழத்தின் எப்பகுதியிலும் சிறிலங்காப் படையினர் மேற்கொள்ள முயற்சிக்கும் போதெல்லாம் மூலோபாய ரீதியில் தவறாக நான்கு டிவிசன் படையணிகள் நிலைப்படுத்தியமைக்கான விலைகளை சிங்கள இராணுவமும் சிங்கள தேசமும் முகங்கொடுக்கவேண்டியிருக்கும்.

இராணுவ மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம்:

போரினை முறையாகத் திட்டமிடுவதற்கும் அதனை செயற்படுத்துவதற்குமான நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் இராணுவ மூலோபாயம் என்றழைக்கப்படுகின்றது.

திட்டமிடல், நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நகர்வு, படைகளை பல்வேறு இடங்களில் நிலைப்படுத்துதல் மற்றும் எதிரியை ஏமாற்றுதல் என்ற விடயங்கள் மூலோபாயத்தில் உள்ளடக்கப்படுகின்றன.

நவீன போரியல் மூலோபாயத்தின் தந்தை என அழைக்கப்படும் கார்ல் வொன் குளொஸ்விச் இராணுவ தந்திரோபாயத்தை சுருக்கமாக பின்வருமாறு கூறுகின்றார்.

~சமர்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவதன் மூலம் போரின் முடிவை - அதாவது வெற்றியை அடைதல்|.

~எல்லாவாற்றிலும் மிகவும் முதன்மையானதும் முதலாவதுமாக இருப்பது, தேசத்தின் தலைவர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர், போர் என்பது அரசியல் கோட்பாட்டை அடைவதற்கான ஒரு வழி என்பதனை நினைவில் கொண்டும், எவ்வகையான போரிலே தாங்கள் ஈடுபடுகின்றோம் என்பதை சரியாக விளங்கிக்கொண்டும் அதனைத் தவறான வழியிலே கொண்டுசெல்லாமல் போரை அதன் இயல்பான குணாம்சத்திற்கு எதிராக மாற்றாது, அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்துகொண்டும் முன்னெடுக்கவேண்டும். இதுவே மூலோபாயம் தொடர்பான மிகவும் சுருக்கமானதும் மிகவும்; அடிப்படையானதுமாகும்.|

~ஒருவருமே போரின் மூலம் எதனை அடையப்போகின்றோம் என்பதை மனதில் தெளிவாக்கிகொள்ளாமலும் (அரசியல் நோக்கம்) எவ்வாறு அதனை நடத்தப்போகின்றோம் என்பது தொடர்பான (நடவடிக்கையின் இலக்கு) தெளிவில்லாமலும் போரை தொடங்குவதில்லை.|

அதாவது குளோஸ்விச்சின் மொழியில் கூறுவதானால், ~மூலோபாயம் என்பது திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பல்வேறு வழிமுறைகளையும் வளங்கள்களையும் ஒருமுகப்படுத்தி ஒரு தேசமோ, ஒரு அரசியல் அமைப்போ, ஒரு தளபதியோ அல்லது ஒரு கூட்டணியோ தனது எதிரிக்கு எதிராக அனுகூலங்களை பெறுதல் ஆகும்.|

இதனடிப்படையிலே பார்த்தோமானால் ஜேர்மானியர்கள் இரண்டு உலகப்போர்களிலும் தாம் சிறப்பாகச் சண்டை செய்வதை நிரூபித்தார்கள். எனினும் போரை எவ்வாறு நடாத்தி வெற்றி பெறுவது என்ற மூலோபாயத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள். இதேபோன்றுதான் பிரான்சு மற்றும் அமெரிக்கா ஆகியன இந்தோசீனாவில் இவ்வாறான தவறிழைத்தார்கள்.

இப்போர்களிலே அமெரிக்காவின் நெருக்கடியையும் இக்கட்டையும் பின்வருமாறு கூறலாம்.

~சூழ்நிலைகளை அறிவதிலும் அது தொடர்பாக கற்பனை செய்து பார்ப்பதிலும் அமெரிக்கத் தலைவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். வியட்நாமில் அமெரிக்கர்களுக்கு இருந்தது என்னவென்றால் மிகவும் வரையறுக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமும் அதற்கான வரையறுக்கப்பட்ட முடிவுகளுமே. ஆனால் வியட்நாமியர்களுக்கோ தப்பிப்பிழைப்பதற்கான மற்றும் உயிர்வாழ்வதற்கான எல்லையற்ற யுத்தமும் அதனை வெல்லவேண்டும் என்பதற்கான அர்ப்பணிப்பு, நாட்டின் மீதான காதல், அந்நியர்களை எதிர்க்கவேண்டும் என்ற மனோபாவம் போன்ற எல்லாமே காணப்பட்டது.|

-கொலின் கிறே அமெரிக்க ஹில் பல்கலைக்கழக பாதுகாப்பு கற்கை நெறி இயக்குனர்.

மேலே கூறப்பட்டது எமது விடுதலைப் போராட்டத்திற்கும் நூற்றிற்கு நூறு வீதம் பொருந்துகின்றது. ஆனால் சிங்களத் தலைவர்கள் வரலாறுகளை படித்து அதிலிருந்து பாடம் கற்பார்கள் என்பதை நாம் ஒருவரும் எதிர்பார்க்க முடியாது. நன்றி: தமிழ்நாதம்

Please Click here to login / register to post your comments.