வடமாகாண சபைத் தேர்தல் எதிர்பார்ப்பினை சட்டத்தரணிகள் எவ்வாறு நோக்கின்றார்கள்?

ஆக்கம்: தியாகராஜா நிரோஷ்
வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிப்புக்கள் வெளியாகாத நிலையிலும் அத் தேர்தல் பற்றி பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

இவ்வாறானதோர் சூழ்நிலையில் வட மாகாண சபைத் தேர்தலுடன் ஒன்றித்ததாக இன்றைய நிலையில் தமிழ் மக்களின் தேவைகள் என்ன? அத்தேவைகளை நிறைவேற்றுவதில் எவ்வாறான அணுகுமுறைகள் மற்றும் செயற்றிட்டங்கள் அவசியம் என்பது தொடர்பில் வீரகேசரி பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வாரம் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதில் கருத்துரைத்த சில சட்டத்தரணிகளது கருத்துக்களை இங்கு பதிவு செய்கின்றோம்.

அபிலாசைகளை நோக்கி தமிழர்கள் பயணிப்ததற்கா தொடக்கப்புள்ளி வட மாகாண சபை

கே.வி.தவராசா, சட்டத்தரணி

13ஆவது அரசியல்யாப்பின்படி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைக்கான சட்டத்தின்படி 1988ஆம்ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என அரசினால் கூறப்படுகின்ற போதிலும் தேர்தலுக்கான அறிவிப்போ அல்லது தேர்தல் நடாத்தப்படும் தினமோ இன்றுவரை அறிவிக்கப்படவில்லை அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல்வீரவன்சவும் ஜாதிக ஹலஉறுமயவின் செயலாளரான சம்பிக ரணவகவும் 13ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விட்டுள்ளனர்;

இதேபோல் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த சிங்கள மக்களை மீளக் குடியேற்றும்வரை வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தக் கூடாது எனவும் இதற்கு தாம் அனுமதியளிக்கபோவதில்லையென ஜாதிக ஹலஉறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் அறிவித்துள்ளார்;;;. இந்த நிலையில் காணி பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படாமல் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்றத் தீர்ப்புவரும் வரை வட மாகாணசபைத் தேர்தல் காலவரையின்றி தள்ளிப்போடும் சாத்தியங்களும் காணப்படுகின்றன மாகாணசபை முறை தேர்தலில் போட்டியிடுவது தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு ஏற்புடைதல்ல தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் சுயநிர்ணய உரிமை உண்டு; இதனைக் கைவிட்டு அரசியல் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்ற வாதம் முன்வைக்கப்படலாம்;.

தேசியம்இதாயகம்இசுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லையெனினும் நாம் எந்த சூழ்நிலையில் இந்தக் கோரிக்கைகளை முன் வைக்கின்றோம் என்பதுதான் இங்கு எழும் வினா சென்ற நூற்றான்டின் மத்தியில் யுதர்கள் இருந்த நிலையில் இன்று ஈழத்தமிழர்கள் விடப்படடிருக்கின்றார்கள் மாபெரும் மனிதப் பெருந்துன்;பம் சுற்றி நிகழ்து கொண்டிருக்கின்றது நாம் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வரலாற்றை கட்டமைக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். வரலாற்றில் பல வாய்புக்கள் கைநழுவிச் சென்றுவிட்டன. நடைபெறப் போவதாகக் கூறப்படும் வடமாகாணசபைத் தேர்தல் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு விரத்தியின் விளிம்பில் நிற்கும் எமது சமூகம் அரசியல் அபிலாசையை நோக்கிப் பயணிப்பதற்கு இந்த வடமாகாணசபைத் தேர்தலை மீண்டும் ஒரு துவக்கப்புள்ளியாக பார்க்கப்பட வேண்டிய தேர்தலாகும்.

தேசிய ரீதியாக மட்டுமின்றி சர்வதேச ரீதியாகவும் மிக உண்ணிப்பாக உற்று நோக்கப்படும் தேர்தலாகும் இது. சர்வதேச சமூகத்தின் கரிசனை இலங்கைத் தமிழர் போராட்டத்தின் மீது அதிகரித்து வரும் இப்போதைய நிலையில் நாம் எமது அரசியல் குரோதங்களை அகற்றி நாம் தமிழர் என ஒற்றுமையாக ஓரே குரலில் குரல் எழுப்பவேண்டியது காலத்தின் கட்டாயம் எமக்குள்ளது.

தலைமுறைகளின் வாழ்வொளியில் தடையாய்ப் பரவும் இருட்டை முன்கூட்டி விலக்கும் தத்துவம் செயல்முறைகளைக் கொண்டோரை தலைமுறைகளின் தலைவர் எனக்குறிப்பிடுவாhர்கள் அந்தத் தலைமையின் கீழ் சூழ்நிலைக்கு ஏற்ப யதார்தரீதியாக காய் நகர்த்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அதனையே தமிழ் மக்களின் தலைவர் சம்பந்தன் கையாள்கின்றார் யுத்தத்தின் பின்னர்இ தமிழர்களான நாங்கள் எங்கே நிற்;;கின்றோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் எந்த வித மன அழுத்தத்திற்கும் உள்ளாகாமல் சுயமாக் சிந்தித்து பார்க்க வேண்டும் தமிழ் மக்களின் தெரிவு கூட்டமைப்பு என்பதனை கடந்த கால தேர்தல்கள் நிருபித்துள்ளன இந்த நிலையில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாமல்விடின்; முன்னர் நூற்றுக்கணக்கான வாக்குக்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கிலிருந்து தெரிவாகியது போன்ற நிலைதான உருவாகும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டிடுவது தவிர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச் ஜாதிக ஹலஉறுமயவின் செயலாளரான சம்பிக ரணவகஇ ஜாதிக ஹலஉறுமயவினன் தலைவர் ஒமல்பே சோபித தேரர் ஆகியோரின் எதிர்பார்ப்பை கோரிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே அமையும் வடமாகாணசபைத் தேர்தல் இரண்டாம் ஈழப்போhர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச் கூறியுள்ள நிலையில் வடமாகாணசபைத் தேர்தலை நாம் புறக்கணித்தால் தேர்தல் என்ற போர்களத்திலும் தோல்விதான் ஏற்படும்.

மாகாண சபைகள் தீர்வாக இல்லாதபோதும் நிராகரிக்கமுடியாதது.

சி.வி.விவேகானந்தன், சட்டத்தரணி

தென்னிலங்கைக் கட்சிகள் எந்தக் கட்சிகளாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான அதிகாரப்பகிர்வினை ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.

அறுபது ஆண்டுகளாகக் தமிழ் மக்களுக்கான தீர்வு கொடுக்கப்படவில்லை என்ற நிலையில் இனிவருங்காலத்திலும் அவர்கள் அதனைக் கொடுக்கப்போவதில்லை. எதோ பலவிதமான சாட்டுக்களை ஒவ்வொரு முறையும் கூறி தமிழர்கள் கேட்கின்ற அத்தனையினையும் அவர்கள் மழுங்கடித்து விடுவார்கள்.

ஆனால்இ சரியோ பிளையோ இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்புத் திட்டத்தின் பிரகாரம் முன்னர் மாகாண சபைகள் இணைக்கப்பட்டும் தற்போது பிரிக்கப்பட்டதுமாக மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுகின்றது. இந்த மாகாண சபைத் தேர்தல்களையே வேண்டாம் என்றும் 13 ஆவது திருத்தம் இலங்கைக்குத் தேவையில்லை என்றும் கூறப்படுகின்றது. பௌத்த சிங்கள மேலாதிக்கம் கொண்டவர்கள் பத்திரிகைகள் மூலம்இ 53 வீதமான மக்கள் பதின்மூன்றாவது திருத்தம் தேவையில்லை என்றும் அதை இரத்துச் செய்யவேண்டும் என்றும் விரும்புகின்றார்கள் போல் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அது மட்டுமல்லஇ மாகாண சபை மூலம் தீர்வு கொடுக்கப்படவேண்டும் எனக் கூறி தென்னிலங்கையில் அந்தக் காலத்தில் பேசிய புத்திஜீவிகள் எல்லோரும் இப்போது அதன்படி தீர்வு கொடுக்கப்படக் கூடாது என்று கூற முற்படுகின்றனர்.

பொதுவாக முன்னாள் நீதியரசர் சரத்.என் சில்வா கடந்த கிழமை ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில்இ மாவட்ட ரீதியான அதிகாரமங்களே கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளார். 13 ஆவது திருத்தம் இருக்கவேண்டியதில்லை எனவும் அவர் தற்போது அபிப்ராயம் கொண்டுள்ளார். ஆனால்இ யுத்தம் நடைபெற்ற காலத்தில் இவற்றை எல்லாம் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர் அவர்.. அதேபோன்றுதான் மேலும் பல சிங்கள புத்திஜீவிகளின் நிலையும் உள்ளது. சிங்கள புத்திஜீவிகளில் இடது சாரித்தலைவர்கள்; சிலபேர் தான் தீர்வு இருக்கவேண்டும் என்று சொல்கின்றார்கள். இந்த இடது சாரித்தலைவர்களுக்கு சிங்கள மக்களிடத்தில் செல்வாக்குக் கிடையாது. அவர்கள் தனித்துதேர்தலில் போட்டியிட்டால் தேல்வியடைவார்கள்.

ஆகவே இவர்களை நம்பியும் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. இந்த இடத்தில் மற்றொரு வடிவில்இ தமிழ் மக்கள் தலைவர்களும் மாகாண சபை தங்களுக்குப் போதாது… தேவையில்லை… என்று நிற்கின்றார்கள். மாகாணசபைகளக்கு மேலாகக் கேட்கின்றனர். இந்த நடவடிக்கை கையில் இருக்கின்ற பறவையினை விட்டுவிட்டு பற்றைக்குள் இருக்கின்ற பறவையினைப் பிடிப்பதற்கு முயற்சிப்பதற்கு ஒப்பானது. அவர்கள் “இந்த மாகாண சபையினை செயற்படுத்தவேண்டும் என நாம் நிற்கவில்லை. ஆனால் தேர்தல் கேற்கின்றோம்.” என்கின்றனர். அவ்வாறான நிலையில் எதற்கு இந்தத் தேர்தல் என்ற கேள்வி எழுகின்றது. நாம் இந்த 13 அரசியலமைப்புத்திருத்தம் இனப்பிரச்சினைத் தீர்வில் போதுமானதாக இல்லாவிட்டாலும் அதனை தூக்கிவீசக்கூடாது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைக் கொடுத்து தேர்தல் நடத்தவேண்டும். அதன் பிறகு எங்களுக்கான கூடிய அதிகாரங்கள் பற்றி பின்னர் பேசிக்கொள்ளமுடியும். இதனை கடைப்பிடிக்காது தேர்தல் பற்றி எல்லோரும் பேசுகின்றார்கள். ஆட்சி பெரிது என்பதுதான் அவர்கள் எல்லோருக்கும் சண்டை சச்சரவுக்குரிய விடயமாகவுள்ளது. இது தவிர்க்கப்படவேண்டும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்குள் வெளியில் ஒற்றுமை காட்டப்பட்டபோதும் உள்ளளவில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. எனினும் வடக்குமாகாண சபைத் தேர்தலில் தம்ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் வெல்லும் என நாங்கள் கட்டியம் கூறுகின்றோம். அதேயிடத்து அரசாங்கமும் தனது வெற்றிக்காக பல்வேறு நடவடிக்கைகளைச் செய்கின்றது. பல சிங்கள வாக்காளர்கள் வடக்கில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இவர்களுடைய வாக்கு மற்றும் அரசாங்கத்துடன் நிற்கக் கூடிய தமழ் முஸ்லிம் கட்சிகளுடைய வாக்குகளும் அரசாங்கத்திற்கே போகப் போகின்றன.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்களை அதிகமாக வாக்களிக்க செய்திருந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலத்தினை அங்கு அதிகரித்திருக்கலாம். ஆனால் அதனை கூட்டமைப்புச் செய்யவில்லை. இதனைப் போல் வடக்கு மாகாணத்திலும் நடக்கலாம். ஆகவே கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை நிவர்த்தித்து சரியான செயற்பாடுகளை வகுக்கவேண்டும். இது இன்றைய தேவை.

மாகாண சபைகள் தமிழர்களுக்கு உசிதமாவையல்ல

சி.அ.யோதிலிங்கம், சட்டத்தரணி

13வது அரசியல்யாப்புத் திருத்தத்தின்படியும், மாகாணசபைகள் சட்;டத்தின்படியும் மாகாணசபைகளுக்கு எந்தவித சுயாதீனமும் கிடையாது. மத்திய அரசில் தங்கி நிற்கும் நிலையே உண்டு. மத்திய அரசு தயவு பண்ணினால் மட்டும் மாகாணசபைகளுக்கு ஏதாவது கிடைக்கும். பேரினவாத அரசு தயவுபண்ணும் நிலை தற்போதைக்கு இல்லை. தயவுபண்ணுமாறு கேட்பதும் தமிழ்மக்களின் இறைமைக்கு ஏற்றதல்ல.

மாகாணசபை முறை தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு எந்தவகையிலும் பொருத்தமானதல்ல என்பதை கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் பின்னரும் தமிழ்த்தேசிய கட்சி மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முனைப்புக்காட்டுகிறதென்றால் அரசியல் இரட்டைவேடம் என்றே கூறவேண்டும். அல்லது அது தமது எஜமானர்களது வேண்டுகோள்களை தட்டிக்கழிக்கமுடியாத நிலையில் உள்ளது. என்றே கூறவேண்டும்.

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது மூன்று பாதிப்புக்களைத் தமிழ்மக்களுக்கு கொடுத்துவிடுகின்றது. ஒன்று முன்னரே கூறியது போல தமிழ்மக்களின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. தமிழ்மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்றவகையில் அவர்களுக்கு இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு. இதனை மறுதலித்து தங்கிவாழ முற்படுவது தமிழ்மக்களின் இறைமையினையே கேலிக்கூத்தாக்கிவிடும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரச்சார மேடைகளில் பேசிவருகின்ற தேசியம், சுயநிர்ணயம் என்பதையும் அர்த்தமற்றதாக்கிவிடும். இரண்டாவது தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை மாகாணசபைக்குள்ளேயே முடக்குவதாக அமைந்துவிடும். இதன் பின்னர் தேசியம், சுயநிர்ணயம் என்ற குரலையே தமிழ்மக்களினால் எழுப்பமுடியாது.

மூன்றாவது வடக்கு – கிழக்கு பிரிப்பிற்கு தமிழ்மக்களே ஆணைகொடுப்பதாக அமைந்துவிடும். ஏற்கனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அந்த ஆணையை போட்டியிட்ட தமிழ்த் தேசிய தரப்புக்கள் வழங்கியிருந்ததாக அர்த்தப்படுகின்றேன். வட – மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது அந்த ஆணையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும். வட – கிழக்கு இணைப்பு என்பது தமிழ்மக்களின் கூட்டிருப்புக்கும் கூட்டுரிமைக்கும் மிக அவசியம். கூட்டமைப்பு போட்டியிடாவிட்டால் தவறானவர்கள் மாகாண நிர்வாகத்தை கைப்பற்றிவிடலாம் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்படுபாடுகளை ஏதாவது செய்யலாம். சுயேட்சைக்குழுக்களை இறக்குவது பற்றி யோசிக்கலாம்.

மாகாணசபைக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் தமிழ்மக்களுக்கென ஒரு அரசியல்களம் கிடைக்கும் என்றவாதமும் முன்வைக்கப்படுகிறது. இதுவும் தவறானதாகும். தமிழ்மக்களுக்கு ஏற்கனவே பாராளுமன்றம், உள்ள+ராட்சிசபைகள் எனப்பல களங்கள் இருக்கின்றன. சர்வதேசவெளி தமிழ்மக்களுக்குத் திறந்துவிடப்பட்டதினால் சர்வதேசக்களமும் இருக்கின்றது. இந்தக்களங்களையெல்லாம் பதவியில் இருக்கின்ற தமிழ்த் தலைமைகள் ஒழுங்காகப்பயன்படுத்தியதா? என்றால் இல்லையென்றே கூறவேண்டும்.

ஏற்கனவே கிழக்குமாகாணசபையில் தமிழ்ச்சமூகமே எதிர்க்கட்சியாகவுள்ளது. அந்தக்களம் ஒழுங்காகப்பயன்படுத்தப்படுகிறதா? கிழக்குத் தமிழ்மக்களின் பிரச்சினைகள் அந்தக் களத்தில்ப்பேசப்படுகின்றதா? கூட்டமைப்பின் தலைமை அதற்கு ஒழுங்கான தலைமையைக் கொடுக்கின்றதா? அவ்வாறான தலைமையைக் கொடுப்பதற்கு குறைந்தபட்சம் உள்வீட்டுப்பிரச்சினையையாவது தலைமை தீர்த்துவைத்திருக்கின்றதா? இலக்குஇ கொள்கை, செயற்திட்டம் தேவை என்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது தமிழ்மக்களுக்குத் தேவை தேர்தலில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சியல்ல. மாறாக தமிழ்மக்களின் அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய தேசிய அரசியல் இயக்கமே. அத்தகைய ஒரு அரசியல் இயக்கத்திற்கு தேர்தல் அதன் பணிகளில் ஒன்றாக இருக்குமே தவிர அதுவே இலக்காக இருக்கமுடியாது.

இயல்பு வாழ்க்கைக்கான அடித்தளமாக வடமாகாண சபையினை பயன்படுத்தலாம்

என்.விஷ்ணுகாந்தன், சட்டத்தரணி

இன்றைய நிலையில் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் உச்சமடைந்துள்ளன. இந் நிலையில்இ வட மாகாண சபைத் தேர்தல் கருத்தாடல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் பரவியுள்ள இராணுவமுகாம்கள் அகற்றப்படவேண்டும் என்பதுடன் தமக்கான சகல பிரச்சினைகளையும் தீர்கப்படக் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்ற அபிலாசைகள் தமிழ் மக்களிடத்தில் முன்னிடத்தில் இருக்கின்றன.

இவ்வாறானதோர் சூழ்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டுஇ 2008 ஆம் ஆண்டுஇ மற்றும் தற்போதைய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வான வரைபு ஒன்றினைத் தயாரிக்கவேண்டிய பொறுப்பும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறான பொறுப்பு காணப்படுகையில்இ அண்மையில் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுடன் வருகை தந்து மேற்படி விடயங்களைக் கருத்தில் கொண்ட வரைபு ஒன்றினைத் தான் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஓர் தடவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான கரிசனையினை வெளிப்படுத்தியிருந்தார்.அவர் மேலும் தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக தயாரிக்கப்படும் ஆவணம் யாப்பாக இருக்கும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ள முக்கியமானதோர் காலகட்டத்தில் அதிலிருந்தும் தமிழ் மக்கள் நிலைமைகளை சரியாகப் பயன்படுத்தவேண்டியதோர் தேவை இன்றுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மிகவும் பாதிப்புக்குள்ளானதாகவுள்ளது. அந்த இராணுவ பிரசன்னத்தினை குறைப்புச் செய்வது அல்லது அகற்றுவது பற்றி யோசிக்கையில்இ மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன அல்லது தாம் ஆட்சிக்கு வந்தால் என்ன முகாம்களை அகற்றுவோம் என்ற அபிப்பிராயத்தினையும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி முன்வைத்துள்ளதோர் சூழ்நிலையில்இ தமிழ் மக்கள் என்ன செயற்பாட்டினை இக் காலகட்டத்தில் முன்னெடுக்க முடியும் என ஊகிக்க வேண்டியுள்ளது.

மேலும் தமிழ் மக்களைப் பொருத்தளவில் அவர்கள் அந் நாட்களில் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களின் பின்னின்றுஇ இன்று அவர்கள் தமக்கான சரியான தலைமைத்துவங்கள் வேண்டும் என்ற நிலையிலும் உள்ளனர். நான் பலதரப்பட்ட புத்திஜீவிகளுடனும் பேசுகையில் அவர்கள் தேசியக் கட்சி யொன்றின் பின்; சென்றாலே தீர்வு ஒன்றினை எட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்பதனையும் தெரிவிக்கின்றனர்.

மக்கள் சிறந்த அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்யவேண்டிய பொறுப்பு மிக்கதோர் காலகட்டத்தில் தான் வடமாகாண சபை பரபரப்புகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். ஆகவே சந்தர்ப்ப சூழ்நிலைகளை சரியாகப் புரிந்துகொண்டு இதனைப் பயன்படுத்தவேண்டும் என்பதே சிறந்தது.

வாக்குரிமையை உபயோகித்து செய்தியை வெளிப்படுத்தவேண்டும்

சந்திரபிரகாசம் நிறைஞ்சன், சட்டத்தரணி

வெள்ளாமுள்டளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின் தமிழ் மக்கள் மிகுந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாமும் தமது தனிப்பட்ட வாழ்க்கையாகவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் வடபகுதி மக்கள் சந்திக்கவுள்ள முதலாவது வடமாகாண சபைத் தேர்தல் பற்றிய சலசலப்புக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

வடமாகாண சபைத்தேர்தலை நடத்தக் கூடாது எனவும் 13 ஆவது திருத்தத்தினை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவரப்போதவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தவண்ணமே உள்ளன. வடமாகாண சபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். அத்துடன் மாகாண சபை முறைமையூடான எந்தவொரு அதிகாரத்தினையும் வழங்கவும் இல்லை. இது வெளிப்படையும் கூட. வாக்குரிமை என்பது இறைமையுள்ள மக்களின் ஆயுதம். அதனை சரியாகப் பயன்படுத்தும் போது தான் எமது இலக்கை நாம் ஏய்த முடியும்.

இப்போது தமிழ் மக்கள் முன் விடப்பட்டுள்ள காலத்தின் கடமை என்னவென்று பார்த்தால்இ எமது அடையாளத்தினையும் கலை கலாச்சார விடயங்களையும் தொடர்ந்து அழிந்துவிடாது பாதுகாக்க வேண்டும் என்பதாகும். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தடுத்துவைக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னைநாள் போராளிகளுக்கும் இழப்பீடுகளும் ஆற்றுப்படுத்தல்களும் தேவைப்படுகின்றன. அதனை அடைவதற்காக தமிழ் மக்கள் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. இங்கு உதவி செய்யவதற்காக தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் புத்தஜீவகள் என சகல தரப்புக்களையும் இணைத்து வலையமைப்பு ஒன்றினை ஏற்படுத்தவேண்டிய அவசியமும் எம் முன்னே காணப்படுகின்றது.

இங்குதான் தமிழ்க் கட்சிகளின் செயற்றிட்டம் தேவைப்படுகின்றது. தமிழ் மக்களின் புனர்நிர்மானத்திற்காக உரிய வேலையினைச் செய்யவேண்டிய தேவையும் காணப்படுகின்றது. இங்கு வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை. அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு மாகாண சபையுடன் மட்டுப்படும் நிலையும் காணப்படுகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுவதில்லை என்று கூறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் அதற்கு வியூகம் அமைக்கவேண்டும்.

வாக்காளர் பதிவு முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து அதன் மூலம் தென்பகுதி மக்களுக்கு வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகளும் நடைபெறுகின்றன. அதனால் இத் தேர்தலின் மூலம் தெளிவான செய்தியினை மேற்குலகத்திற்கும் சிங்கள மக்களுக்கும் நாம் தெரிவித்தாக வேண்டும். சில சமயங்களில் இத் தேர்தல் தான் வட மாகாண சபைக்கான முதலாவதும் கடைசியானதுமான தேர்தலாகவும் இருக்கலாம். அதனால் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

Please Click here to login / register to post your comments.