தமிழரின் பாரம்பரிய பிரதேசத்திலிருந்து உடனடியாக இராணுவத்தை வெளியேற்று !

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துஇ நவம்பர் 27, 28 தினங்களில் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை சிறிலங்கா இராணுவம் பார்த்துக்கொண்டு நிற்க சிறிலங்கா காவற் துறையும்இ சிறிலங்கா அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையும் நடாத்தியுள்ளது.

இத்தாக்குதலில் பெருமளவு மாணவர்களும் மாணவிகளும் காயமடைந்துள்ளனர். இந்த ஈவிரக்கமற்ற தாக்குதலினால் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களும் மாணவிகளும் காயமடைந்துள்ளதுடன் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஊடகவியலாளர் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

முன்னைய காலத்தில் நடந்த கல்வித் தரப்படுத்தலிலிருந்து இன்று நடக்கின்ற மாணவர் சமுதாயத்துக்கு எதிரான இராணுவ அடக்குமுறை வரை தமிழ் மாணவ சமூதாயத்தினர் சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளுக்கு பல்வேறு வகையாக முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களது பேச்சுச் சுதந்திரம் மீறப்படும் போது அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈழத் தமிழர்களின் சொத்து கல்விஇ அதை சீரழிக்கும் ஒரு முயற்சி இது என்பது அப்பட்டமாக தெரிகிறது. தொடர்ந்து நடைபெறும் தமிழருக்கு எதிராக இடம்பெறும் இன அழிப்பின் ஒரு பக்கமாகத் தான் இதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

உலக நாடுகளும்இ ஐக்கிய நாடுகள் அவையும் முன்னின்று, முதற் கட்டமாக இராணுவத்தை வெளியேற்றி தமிழ் பிரதேசங்களை தமிழ் மக்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துஇ தமிழர்களுக்கும், இம்மாணவர்களுக்கான பாதுகாப்பை தாமதப்படுத்தாமல் உறுதி செய்ய வேண்டுமென கனடியத் தமிழர் தேசிய அவையினர் வேண்டிக் கொள்கின்றனர்.

இந்நிகழ்வு குறித்து கனடிய தமிழ்இ மற்றும் ஏனைய மாணவர் சமுதாயமும்இ மற்றும் அமைப்புக்களும் மிகவும் பலமான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. தமிழ் இளையோர் அமைப்பினரும்இ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும் இவ்வடக்கு முறையை கனடிய மாணவர்களுக்கும் வேற்றின மக்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர். இம்முயற்சிக்கு சகல தமிழ் அமைப்புக்களும் ஆதரவ

ளிக்க உரிமையுடன் வேண்டுகிறோம். இவர்களுடன் இணைந்து நாமும் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தத்தம் பாராளுமன்ற உறுப்பினருக்கும் கனடிய அரசாங்கத்திற்கும் எடுத்து செல்வோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 416.830.7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca

Please Click here to login / register to post your comments.