“மக்களை நலன்களை முதன்மைப்படுத்து” - சிறீலங்கா மீது கனடா காட்டம்

ஆக்கம்: த.க.செ

ஐ.நா பொதுச்செயலாளர் பான்; கீ மூனால் சிறீலங்கா குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து உலகில் முதலாவது நாடாக அதனை வரவேற்று அதேவேளை சிறீலங்கா குறித்து தனது காட்டமான கருத்துக்களையும் கனடா மீண்டும் வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையினை வெளியிட்ட கனடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயட் (John Baird) அவர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா அறிக்கை இலங்கையில் உள்ள மக்கள் அனுபவித்த மனித உரிமை மீறல்களை விலாவாரியாக பட்டியலிட்டுக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசானது தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளானவர்களையும், தப்பியவர்களையும் புறம்தள்ளி வருவது வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள கனடிய அரச அறிக்கை, சிறீலங்காவில் இன்றுவரை எடுக்கப்பட்டுள்ள எந்த பரிகாரங்களும் போதியதாக அமையவில்லை என்பதை ஐ.நா அறிக்கை தெளிவாக புலப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கின்றது.

இப்போதாவது மக்கள் நலன்களை முதன்மைபடுத்து எனக் காட்டாக சிறீலங்கா அரசை கனடிய அரசு வலியுறுத்தியுள்ளது. அதேவேளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து சிறீலங்காவில் புரியப்பட்ட தவறு போன்று மீண்டும ஒரு தவறு எற்படாது தவிர்க்க முனைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் தற்போதைய அறிக்கை உலகலாவிய அளவில் மீண்டும் மகிந்த அரசு குறித்த சலசலப்பை பெரிதும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அரச மட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையாக கனடிய அரச அறிக்கை அமைந்துள்ளது சிறிலங்காவிற்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Please Click here to login / register to post your comments.