சிறீலங்காவில் இன்னும் மாற்றங்கள் வெளிப்படவில்லை – கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர்

ஆக்கம்: கனடியத் தமிழ் பொருண்மிய மன்றம் (CanTEF) ஊடகப்பிரிவு

இந்த கோடை காலத்தில் சிறீலங்கா அரசானது ஒரு புதிய திட்ட நகலை வெளியிட்டாலும், அது எந்தவொரு மாற்றத்தையும் தளத்தில் பிரதிபலிக்கவில்லை என மார்ச் மாதம்; கனடிய அரசின் நிலைமைகளை கண்டறியும் உத்தியோக பூர்வக் குழுவில் சிறீலங்கா சென்றவரும், கனடிய பாதுபாப்பு அமைச்சரின் பாராளுமன்ற செயளாலருமான Ajax - Pickering பாராளுமன்ற உறுப்பினர் கிர்ஸ் அலெக்ஸ்டாண்டர் கன்ரெவின் (CanTEF) ஊடகப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா விடயத்தில் பிரதமர் காப்பர், வெளிவிவகார அமைச்சர் John Baird, மற்றும் அரசில் உள்ள ஏனையவர்கள் அதீதமான பல கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அக்கரிசனை சிறீலங்கா குறித்த எமது செயற்பாடுகிளில் வெளிப்படுகிறது என்ற பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அவர்கள், மனித உரிமைகள் பெருமளவில் அங்கு (சிறீலங்காவில்) மதிக்கப்படவில்லை. அது இல்லாமல் சமாதானம் என்பது சாத்தியப்படாத ஒன்று என்றார். எமக்கு கரிசனையுள்ள பல விடயங்கள் குறித்து காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாதவரை எமது நோக்கில் நிலைமைகள் ஏற்புடையதாக இருக்காது என்றார் மேலும்.

சமீபத்தில் சிறீலங்கா சென்றபோது அவதானித்த விடயங்களில் முதன்மையான விடயங்கள் யாவை என வினாவியபோது, நாட்டின் வடபகுதியில் நாம் பார்த்தோம், கிழக்கிலும் பெரும் பகுதிகளில் அதுவே உண்மையாக உள்ளது. எங்கும் இராணுவ பிரசன்னமாகவே உள்ளது. மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் எனக் கூறும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய இராணுவப்பிரசன்னம் நியாயப்படுத்தக் கூடிய ஒன்றல்ல என ஆணித்தரமாக் குறிப்பிட்டார்.

பொலீஸ் மற்றும் உள்ளுர் சிவில் நிர்வாக்கக்கட்டமைப்புக்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. உள்ளுர் தேர்தல்கள் நடாத்தப்படவில்லை. தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமான பல அறிக்கைகள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளன. மக்கள் காணாமல் போகின்றனர். மக்கள் ஏதோ ஒரு வழியில் எழுந்தமான தடுப்பு காவலை எதிர்கொள்கின்றனர் அல்லது எழுந்தமான துன்புறுத்தல்களை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர், என்றார் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர்.

இந்த விடயங்களை நாம் சிறீலங்கா விஐயத்தின் போது எழுப்பினோம். நாங்கள் இதுகுறித்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். இது குறித்த நடவடிக்கைகள் குறித்து நீண்ட காலமாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த கோடையிலும் அரசாங்கம் ஒரு புதிய செயல்திட்டத்தை வெளியிட்டது. ஆனால் தளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் இது வெளிப்படுத்தவில்லை என்றார்.

இந்த நிலைமை எமக்கு ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லையாயின், எமது (கனடிய) பிரதமர் அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளார். எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் எதனையும் நாம் இதுவரை காணவில்லை என்றார்.

சிறீலங்காவில் இரு தரப்பிலும் நீண்டகாலப் போரில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குறிப்பாக தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக 2009இல் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நடைபெற்ற இறுதிப்போரில் பெருமளவில் தமிழ் மக்கள் கொல்லக்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் குடும்பங்கள், காயமடைந்தோர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் என்ன நடந்தது என்பதை அறிய உரித்துடையவர்கள். யார் இறந்தார்கள்? அவர்களுடைய சடலங்கள் எங்கு உள்ளன? என்ன நடந்தது? என்பதை கண்டறிய எந்தவித காத்திரமான முயற்சிகளும் செய்யப்படவில்லை. இது தமிழர்களுக்கு மட்டும் கடினமான விடயம் அல்ல, சிறீலங்காவில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், சர்வதேச பங்காளர்களுக்கும் சிறீலங்காவின் இருண்ட சரித்திரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர அத்தியாவசியமாகின்றது என்றார் மேலும்.

இவ்விடயத்தை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லலாம் என வினவிய போது, முதன்மையான விடயம் இவ்விடயங்களைப்பற்றித் தொடர்ந்தும் பேசவேண்டும். என்ன நடந்தது, நடக்கிறது என்ற உண்மையைத் தொடர்ந்தும் பேசவேண்டும் என்றார்.

இவ்விடயத்தில் கனடா நிறையவே செய்யமுடியும் என்றார். கனடா தனித்துவமாகவே பல விடயங்களை துணிவுடன் செய்வதையும் குறிப்பிட்டார். குறிப்பாக கொமன்வெல்த் மாநாடு குறித்த கனடாவின் தனித்துவமான முடிவைக் சுட்டிக்காட்டினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வு மேம்பட உதவிட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மக்கள் ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும், முழுமையான இயல்புநிலையை எட்ட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றார். மக்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்களுக்கு திரும்புகின்றபோது ஒன்றில் அவர்கள் வதிவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது எரிக்கப்பட்டுள்ளன அல்லது காணிப்பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றனர். இது ஒரு வலியுள்ள திரும்புகையாக அமைகின்றது என்றார்.

சிறீலங்கா விடயத்தில் ஒரு காத்திரமான சர்வதேச அணுகுமுறை இல்லை என்பதை அவர் ஏற்றுக் கொண்டாலும், கடந்த இலைதளிர் காலத்தில் nஐனிவாவில் சிறீலங்கா குறித்து ஐ.நா மனித உரிமைகள் அவையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கடுமையான செய்தியை சொல்லியுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்தும் இது குறித்து ஏனையவர்களுடன் பேசவேண்டும். மாற்றத்தை சிறீலங்கா வெளிப்படுத்தவில்லை ஆனால் கடுமையாளன விளைவுகளை சிறீலங்கா சந்திவேண்டிவரும் என்றார்.

நீதியில்லாத சமாதானம் ஒருபோதும் நீண்ட கால அமைதியைக் கொண்டுவராது, அதுவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் கற்றுக்; கொண்ட பாடம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு வருவதற்கு முன்னர் ரஸ்சியா, அவ்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முன்னணி ராஐதந்திரியாக பணியாற்றியவர் கிரிஸ் அலெக்டாண்டர் அவர்கள். அமைதியான, குறைந்த குற்றங்களுள்ள, ஒப்பீட்டளவில் நல்ல பொருளாதாரத்தை கொண்ட சொந்த நாடான கனடாவிற்கு நிரந்தரமான திரும்பியுள்ளமை மகிழ்ச்சி தந்தாலும், சிறீலங்கா, அவ்கானிஸ்தான், ரஸ்சிய மக்களைப் பற்றி சந்திக்கும் போது கவலை ஏற்படுகிறது என்றார்.

கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை, குறிப்பாக இரான், சிரியா, சீனா, ரஸ்சியா எனப்பல விடயங்களை இவ்செவ்வியில் அவர் பகிர்ந்து கொண்டார். கனடாவிலான வெளிநாட்டு முதலீடுகள், அரசியலில் மக்களின் பங்களிப்பு எனப் பல விடயங்களை நீங்கள் கீழே உள்ள செவ்வியில் முழுமையாக கேட்கலாம்.

Chris Alexander, Canadian MP for Ajax - Pickering, ON recently returned from his Fact Finding Mission in Sri Lanka

You Tube: இணையம்

காணொளி இணைப்பு:

Please Click here to login / register to post your comments.