ல, ழ, ள உச்சரிப்பு

ஆக்கம்: சிவஜோதி

ல, ழ, ள உச்சரிப்பு சரியாக வராத சில மாணவர்களுக்கு உச்சரிப்பு சரியாக வருவதற்காக, 'அருணாசல புராணம்' என்ற நூலில் உண்ணாமுலை அம்மன் மீதுள்ள துதிப் பாடல் ஒன்றை பலமுறை படிக்கச் சொல்வாராம் கி. வா. ஜ. அதில் நிறைய லகர, ழகர, ளகரங்கள் வருகின்றன.

இதோ அந்தப் பாடல்.

  காரொழுகும் குழலாளைக் கருணை விழிந்
  தொழுகும் இரு கடைக் கண்ணாளை

  மூரலிள நிலவொழுகப் புழுகொழுக
  அழகொழுகும் முகத்தி னாளை

  வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்
  தெரியாத மருங்கு லாளைச்

  சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா
  முலையாளைச் சிந்தை செய்வாம்.

இந்தப் பாட்டை ஒருவர் சரியாகச் சொல்லத் தெரிந்துவிட்டால் லகர, ழகர, ளகர பேதங்கள் விளங்கும்படி உச்சரிக்க முடியும்.

அதுவும் 'மூரலின நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தினாளை' என்ற இரண்டாவதடி அவர்கள் நாக்கில் புரண்டால் ரோட் ரோலர் புரண்ட சாலை மாதிரி உச்சரிப்பு சீராகி விடும்.

Please Click here to login / register to post your comments.