சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால் தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மை அடைந்து வருகிறது

ஆக்கம்: நக்கீரன்
திருப்பதி வெங்கடாசலபதியைக் கும்பிடப்போன மகிந்தா இராசபக்சேயை செய்தியாளர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலை பற்றிக் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த இராசபக்சே தமிழர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை போருக்குப் பின்னர் அவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் எனப் பதில் அளித்தார். இந்தப் பதில் வழக்கமாக அவர் சொல்லும் பதில்தான். ஆனால் போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் - சிங்களம் இரண்டு இனங்களுக்கு இடையில் இருந்து வரும் இன முரண்பாடு தொடர்ந்தும் கூர்மை அடைந்து வருகிறது. அதற்கான சான்று இப்போது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் நடந்து முடிந்த துடுப்பாட்டப் போட்டி படம்பிடித்துக் காட்டியுள்ளது.

சிறிலங்காவின் வெற்றியைக் கொண்டாடத் தெற்கில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா தோற்றபோது கொழும்பில் மயான அமைதி நிலவியது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியை வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புக்களை சிங்களக் காடையர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அட்டன், சமநலகம, கிஜ்ரா புர பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான மூன்று தமிழ் இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்கத்தவறினால் கடை அடைப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலண்டனில் கூட குடிவெறியில் இருந்த சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அணி போட்டியில் வென்றிருந்தால் சிங்கள இனவெறியர்களைப் பிடித்திருக்க முடியாது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைத் தங்கள் பிறவி எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவம் வி.புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. அது போல உலகக் கிண்ணப் போட்டியிலும் சிறிலங்கா அணி இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடும். அந்த வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தவாறு கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவை மிஞ்சும் வண்ணம் அய்யன்னாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை, அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும், அந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் எனப் போர் வெறியூட்டும் தோரணையில் கூறி உள்ளார். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? அல்லது இந்திய துடுப்பாட்டு வீரர்கள் வி. புலிப் பயங்கரவாதிகளா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த ஈழப் போர் நான்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சரண் அடைந்த தளபதிகள் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்பட்டு அழித்தொழிக்கப் படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளார்கள். எப்படி? வடக்கில் 50,000 இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் நடைபெறுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும் முன்னாள் வி.புலிப் போராளிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்? இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இதில் 3 தவிர எஞ்சிய 14 பல்கலைக் கழகங்களும் தென்னிலங்கையில் இருக்கின்றன. சிங்கள அரசு தென்னிலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களில் 7 பல்கலைக்கழகங்களை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வட - கிழக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் தன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கல்வித் துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் தமிழ்மக்கள் மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடத்தப்படுகிறார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படுகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்த உரிமை இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள சிங்கள அரசு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மரியாதையோடு நடத்துவதில்லை. ஏதிலி முகாம்களைப் பார்வையிட அவர்களுக்கு அனுமதியில்லை. அதே போல் முன்னாள் போராளிகளை அடைத்து வைத்திருக்கும் முகாம்களுக்குச் சென்று அவர்களைச் சந்திக்க தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. ஒரு சாதாரண சிங்கள இராணுவ அதிகாரி அவர்களைத் தடுக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. வட - கிழக்கு மாவட்டங்களில் இடம்பெறும் அபிவிருத்திக் கூட்டங்களுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு சிறிலங்கா நிருவாக சேவைக்கு நடத்தப்பட்ட தேர்வில் 250 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டும் தெரிவானார்.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகங்களுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 29 பேரில் ஒரேயொருவர் மட்டும் தமிழர் ஆவர். அம்பாரை மாவட்டம் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைநிலை பதவிகளுக்கு சிங்களவர்கள நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் 147 தற்காலிக மேலதிக கல்வி இயக்குநர்கள் பணியில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் எவரும் நிரந்தரமாக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் 2 ஆண்டுகள் பணியில் இருந்தால் போதும். அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டு விடுவார்கள்.

1948 இல் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது பொது சேவையில் 24.8 விழுக்காட்டினர் தமி்ழர்கள் ஆவர். அதன் பின்னர் இந்த விழுக்காடு தேயத் தொடங்கியது. 1970 -77 காலப்பகுதியில் இந்த விழுக்காடு 11.10 விழுக்காடாகக் குறைந்து 1978-81 இல் 5.70 விழுக்காடாகத் தேய்ந்தது. இது தமிழர்களது மொத்த மக்கள் விழுக்காட்டை (19.5) விட மிகக் குறைவானதாகும்.

இன அடிப்படையில் மட்டுமல்ல சமய அடிப்படையிலும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சென்ற ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இரவோடு இரவாக திருகோணமலை அரச அதிபர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் டி சில்வா அவர்களால் கைப்பற்றப்பட்டது. திருகோணமலை நகர ஊராட்சி மன்றத்தால புதிதாக எழுதி வைக்கப்பட்ட பழைய அறிவித்தல் பலகையை பொறுத்துக்கொள்ள முடியாத அரச அதிபரே இந்தக் கைங்கரியத்தைக் கச்சிதமாக செய்து முடித்தவர். இங்கேதான் இந்துக்கள் தங்களது அந்தியேட்டிச் சடங்குகளை செய்து வந்தாகள். இப்போது அந்த இடம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டு ஒரு பவுத்த தேரரும் குடியிருக்கி்றார்.

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்துவார கிராமத்தின் குஞ்சிதபாத மலையில் பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான பட்டிப்பளை பகுதி போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டு அங்கு உள்ள தாந்தாமலை என்னும் முருகன் ஆலயம் இந்துக்களின் பண்டைய வழிபாட்டிடும் ஆகும். ஆனால் அண்மையில் சிங்களவர்கள் சிலர் சென்று இராணுவ உதவியுடன் அங்கு புத்தரின் சிலையை வைப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே சமயம் சிங்கள அரசு உலகில் மிகப் பெரிய புத்தர் சிலையை வவுனியாவில் அமைக்கவுள்ளது. சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நிறுவவுள்ளது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரை போற்றி மேன்மைப்படுத்தும் வகையிலேயே இந்தப் புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்தப் புத்தர் சிலை உலகிலேயே அதிக உயரம் கொண்ட புத்தர் சிலையாக இருக்கும். சீனாவின் லுசான் பகுதியில் அமைந்துள்ள 420 அடி உயரப் புத்தர் சிலையே தற்போது உலகில் மிக உயர்ந்த புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தர் சிலை அமைந்துள்ள பீடத்துடன் சேர்த்து 502 அடி உயரமானது. சிறிலங்காவில் மிக உயர்ந்த புத்தர் சிலை குருநாகலில் உள்ளது. இது 88 அடி உயரம் கொண்டது குறிப்பிடத்தக்கது. பௌத்த மதத்தை பின்பற்றாத, தமிழர்கள் அதிகம் வாழும்- தமிழரின் பாரம்பரிய பிரதேசமான வவுனியாவில் இந்தப் புத்தர் சிலையை சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது. இது தமிழர் பகுதிகளில் பவுத்த மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான சிறிலங்கா அரசின் திட்டமிட்ட முயற்சி ஆகும்.

சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால் தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மை அடைந்து வருகிறது.

ஒரு மக்களாட்சி முறைமையில் குடிமக்கள் அனைவரும் இன, மொழி, சமய வேறுபாடின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். எண்ணச் சுதந்திரம் பேச்சுரிமை உறுதிப்படுத்தப் பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Rule of Law) என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப் படவேண்டும்.

சிறிலங்காவில் இன்று மக்களாட்சிக்குப் பதில் மகிந்த இராசபக்சேயின் குடும்ப ஆட்சியே கோலோச்சுகிறது. நாடு கடந்த தமிழீழு ஆரசு போன்ற தமிழ் அமைப்புக்கள் முன்னரைவிட வீச்சோடு தமிழ்மக்கள் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதைப் பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். லிபிய மக்களுக்கு ஒரு நீதி தமிழ்மக்களுக்கு இன்னொரு நீதியா என உரத்துக் கேட்க வேண்டும். அதற்கான காலம் இது. திருப்பதி வெங்கடாசலபதியைக் கும்பிடப்போன மகிந்தா இராசபக்சேயை செய்தியாளர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் நிலை பற்றிக் கேள்வி கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த இராசபக்சே தமிழர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை போருக்குப் பின்னர் அவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் எனப் பதில் அளித்தார். இந்தப் பதில் வழக்கமாக அவர் சொல்லும் பதில்தான். ஆனால் போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் - சிங்களம் இரண்டு இனங்களுக்கு இடையில் இருந்து வரும் இன முரண்பாடு தொடர்ந்தும் கூர்மை அடைந்து வருகிறது. அதற்கான சான்று இப்போது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் நடந்து முடிந்த துடுப்பாட்டப் போட்டி படம்பிடித்துக் காட்டியுள்ளது.

சிறிலங்காவின் வெற்றியைக் கொண்டாடத் தெற்கில் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் சிறிலங்கா தோற்றபோது கொழும்பில் மயான அமைதி நிலவியது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியை வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புக்களை சிங்களக் காடையர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அட்டன், சமநலகம, கிஜ்ரா புர பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்குள்ளான மூன்று தமிழ் இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி நடவடிக்கை எடுக்கத்தவறினால் கடை அடைப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அறிவித்துள்ளார்.

இலண்டனில் கூட குடிவெறியில் இருந்த சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். சிறிலங்கா அணி போட்டியில் வென்றிருந்தால் சிங்கள இனவெறியர்களைப் பிடித்திருக்க முடியாது.

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களைத் தங்கள் பிறவி எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவம் வி.புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது. அது போல உலகக் கிண்ணப் போட்டியிலும் சிறிலங்கா அணி இந்திய அணியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடும். அந்த வெற்றி பிரபாகரனைத் தோற்கடித்தமைக்குச் சமமாகும் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருந்தவாறு கூறியிருக்கிறார்.

சரத் பொன்சேகாவை மிஞ்சும் வண்ணம் அய்யன்னாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து விட்டால் புலிகளுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த படையினருக்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை, அது பயங்காரவாதத்தை வெற்றி கொண்டதற்கு ஒப்பாகும், அந்த வெற்றியை இராணுவத்தினருக்கு கௌரவமளித்து சமர்ப்பணம் செய்வோம் எனப் போர் வெறியூட்டும் தோரணையில் கூறி உள்ளார். அப்படியானால், இந்தியா ஒரு பயங்கரவாத நாடா? அல்லது இந்திய துடுப்பாட்டு வீரர்கள் வி. புலிப் பயங்கரவாதிகளா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த ஈழப் போர் நான்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சரண் அடைந்த தளபதிகள் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்பட்டு அழித்தொழிக்கப் படுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் கடந்த ஒரு மாத காலத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளார்கள். எப்படி? வடக்கில் 50,000 இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் நடைபெறுகிறது.

மறுவாழ்வு முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படும் முன்னாள் வி.புலிப் போராளிகள் தொடர்ந்தும் இராணுவத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்? இது தமிழ் இனத்துக்கும் சிங்கள இனத்துக்கும் இடையில் உள்ள அவநம்பிக்கையையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் 17 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இதில் 3 தவிர எஞ்சிய 14 பல்கலைக் கழகங்களும் தென்னிலங்கையில் இருக்கின்றன. சிங்கள அரசு தென்னிலங்கையில் உள்ள 14 பல்கலைக் கழகங்களில் 7 பல்கலைக்கழகங்களை பன்னாட்டுத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வட - கிழக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் தன்னும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கல்வித் துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் தமிழ்மக்கள் மாற்றாந்தாய் மனப் பான்மையோடு நடத்தப்படுகிறார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படுகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்த உரிமை இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி அதிகாரம் முழுவதையும் தன் கையில் வைத்துக் கொண்டுள்ள சிங்கள அரசு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மரியாதையோடு நடத்துவதில்லை. ஏதிலி முகாம்களைப் பார்வையிட அவர்களுக்கு அனுமதியில்லை. அதே போல் முன்னாள் போராளிகளை அடைத்து வைத்திருக்கும் முகாம்களுக்குச் சென்று அவர்களைச் சந்திக்க தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. ஒரு சாதாரண சிங்கள இராணுவ அதிகாரி அவர்களைத் தடுக்கலாம் என்ற நிலை நிலவுகிறது. வட - கிழக்கு மாவட்டங்களில் இடம்பெறும் அபிவிருத்திக் கூட்டங்களுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு சிறிலங்கா நிருவாக சேவைக்கு நடத்தப்பட்ட தேர்வில் 250 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை. இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 பேர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டும் தெரிவானார்.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலகங்களுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 29 பேரில் ஒரேயொருவர் மட்டும் தமிழர் ஆவர். அம்பாரை மாவட்டம் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடைநிலை பதவிகளுக்கு சிங்களவர்கள நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் 147 தற்காலிக மேலதிக கல்வி இயக்குநர்கள் பணியில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் எவரும் நிரந்தரமாக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் 2 ஆண்டுகள் பணியில் இருந்தால் போதும். அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டு விடுவார்கள்.

1948 இல் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது பொது சேவையில் 24.8 விழுக்காட்டினர் தமி்ழர்கள் ஆவர். அதன் பின்னர் இந்த விழுக்காடு தேயத் தொடங்கியது. 1970 -77 காலப்பகுதியில் இந்த விழுக்காடு 11.10 விழுக்காடாகக் குறைந்து 1978-81 இல் 5.70 விழுக்காடாகத் தேய்ந்தது. இது தமிழர்களது மொத்த மக்கள் விழுக்காட்டை (19.5) விட மிகக் குறைவானதாகும்.

இன அடிப்படையில் மட்டுமல்ல சமய அடிப்படையிலும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சென்ற ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் இரவோடு இரவாக திருகோணமலை அரச அதிபர் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் டி சில்வா அவர்களால் கைப்பற்றப்பட்டது. திருகோணமலை நகர ஊராட்சி மன்றத்தால புதிதாக எழுதி வைக்கப்பட்ட பழைய அறிவித்தல் பலகையை பொறுத்துக்கொள்ள முடியாத அரச அதிபரே இந்தக் கைங்கரியத்தைக் கச்சிதமாக செய்து முடித்தவர். இங்கேதான் இந்துக்கள் தங்களது அந்தியேட்டிச் சடங்குகளை செய்து வந்தாகள். இப்போது அந்த இடம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு ஒரு பவுத்த விகாரை கட்டப்பட்டு ஒரு பவுத்த தேரரும் குடியிருக்கி்றார்.

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கைத் துறைமுகத்துவார கிராமத்தின் குஞ்சிதபாத மலையில் பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான பட்டிப்பளை பகுதி போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டு அங்கு உள்ள தாந்தாமலை என்னும் முருகன் ஆலயம் இந்துக்களின் பண்டைய வழிபாட்டிடும் ஆகும். ஆனால் அண்மையில் சிங்களவர்கள் சிலர் சென்று இராணுவ உதவியுடன் அங்கு புத்தரின் சிலையை வைப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே சமயம் சிங்கள அரசு உலகில் மிகப் பெரிய புத்தர் சிலையை வவுனியாவில் அமைக்கவுள்ளது. சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நிறுவவுள்ளது. சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரை போற்றி மேன்மைப்படுத்தும் வகையிலேயே இந்தப் புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. 522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்தப் புத்தர் சிலை உலகிலேயே அதிக உயரம் கொண்ட புத்தர் சிலையாக இருக்கும். சீனாவின் லுசான் பகுதியில் அமைந்துள்ள 420 அடி உயரப் புத்தர் சிலையே தற்போது உலகில் மிக உயர்ந்த புத்தர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தர் சிலை அமைந்துள்ள பீடத்துடன் சேர்த்து 502 அடி உயரமானது. சிறிலங்காவில் மிக உயர்ந்த புத்தர் சிலை குருநாகலில் உள்ளது. இது 88 அடி உயரம் கொண்டது குறிப்பிடத்தக்கது. பௌத்த மதத்தை பின்பற்றாத, தமிழர்கள் அதிகம் வாழும்- தமிழரின் பாரம்பரிய பிரதேசமான வவுனியாவில் இந்தப் புத்தர் சிலையை சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ளது. இது தமிழர் பகுதிகளில் பவுத்த மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான சிறிலங்கா அரசின் திட்டமிட்ட முயற்சி ஆகும்.

சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால் தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடு கூர்மை அடைந்து வருகிறது.

ஒரு மக்களாட்சி முறைமையில் குடிமக்கள் அனைவரும் இன, மொழி, சமய வேறுபாடின்றி சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். எண்ணச் சுதந்திரம் பேச்சுரிமை உறுதிப்படுத்தப் பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Rule of Law) என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப் படவேண்டும்.

சிறிலங்காவில் இன்று மக்களாட்சிக்குப் பதில் மகிந்த இராசபக்சேயின் குடும்ப ஆட்சியே கோலோச்சுகிறது. நாடு கடந்த தமிழீழு ஆரசு போன்ற தமிழ் அமைப்புக்கள் முன்னரைவிட வீச்சோடு தமிழ்மக்கள் மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதைப் பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். லிபிய மக்களுக்கு ஒரு நீதி தமிழ்மக்களுக்கு இன்னொரு நீதியா என உரத்துக் கேட்க வேண்டும். அதற்கான காலம் இது.

Please Click here to login / register to post your comments.